இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் முதல் லாபகரமாக முன்னேறிச் சென்றன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உயரத்தை எட்டியது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் நிப்டி 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது. இது இந்திய வரலாற்றில் புதிய உச்சமாகும்.
இதே நிலை இன்றும் நீடிக்கும் என்று நினைத்து முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த வகையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 53.73 புள்ளிகள் குறைந்து 40,248.23 என வர்த்தகம் ஆனது. சிஜிபவர், ரெல்கேப்பிட்டல், ரெல்இன்ஃப்ரா, தீபக்னீ, டி.ஹெச்.எப்.எல். உள்ளிட்ட நிறுவன பங்குகள் முறையே 0.73, 1.05, 1.90, 21.95, 0.95 என லாபத்தில் காணப்பட்டது. இன்டெலெக்ட், ஐ.ஓ.பி, ஐடியா உள்ளிட்ட பங்குகள் 36.75, 1.35, 0.31 என வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிப்டி 24.10 புள்ளிகள் வீழ்ந்து, 11,917.20 என வர்த்தகம் நிறைவானது. பஜாஜ் பைனான்ஸ், இன்ஃப்ராடெல், யெஸ்பேங்க், யூ.பி.எல்., பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் அதிகப்பட்சமாக லாபத்தில் வர்த்தகம் ஆகின.
ஜீல், இந்தூஸ்இந்த் பேங்க், அல்ட்ராசெம்கோ, சன் ஃபார்மா உள்ளிட்ட நிறுவன பங்குகள் முறையே 3.70, 2.30, 2.21, 2 என இழப்பைச் சந்தித்தன.
இதையும் படிங்க: 'சேமிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டினாலும் அதில் சரியான திட்டமிடல் இல்லை'