ETV Bharat / business

கூட்டு வட்டி செலுத்தியோருக்கு பணம் திரும்ப தரப்படும்

சென்னை: இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை உடனடியாக கையாளும் வகையில் மையப்படுத்தப்பட்ட வங்கி கணக்கு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

bank
bank
author img

By

Published : Oct 5, 2020, 3:07 PM IST

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை உடனடியாக கையாளும் வகையில், இந்தியன் வங்கி சார்பில் மையப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு நிலையத்தை (Centralised account processing center) இந்தியன் வங்கி செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா இன்று காலை திறந்து வைத்தார்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்தியன் வங்கி கிளைகளில் துவங்கப்படும் கணக்குகளுக்கான, அலுவலகப் பணிகள் இம்மையத்தில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கணக்கு தொடங்குவது பிழையின்றியும், விரைவாகவும் நடைபெறும். முதற்கட்டமாக சென்னையில் தொடங்கப்படும் கணக்குகள் இங்கு பரிசீலிக்கப்படும் என்றும், பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளில் தொடங்கப்படும் வங்கி கணக்குகளும், அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தொடங்கப்படும் கணக்குகளும் பரிசீலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே.பட்டாச்சார்யா, " கரோனா காலத்தில் கடனைத் திரும்ப செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தை பயனாளர்கள் அதிகளவில் பயன்படுத்தினர். பின்னர் அது வெகுவாக குறைந்தது. தொற்று காரணமாக தொழில், வருவாய் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட சிறப்புக் கடன், அவசரக் கடன் உதவி திட்டத்தின் கீழ், 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன், 3 லட்சத்து 60 ஆயிரம் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு 2,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது " என்றார்.

கூட்டு வட்டி செலுத்தியோருக்கு பணம் திரும்ப தரப்படும்
கூட்டு வட்டி செலுத்தியோருக்கு பணம் திரும்ப தரப்படும்

அண்மையில், கடன்களுக்கான வட்டி மீது விதிக்கப்படும் கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே கூட்டு வட்டி செலுத்தியவர்களுக்கு பணம் திரும்பத் தரப்படும் என உச்ச நீதிமன்ற மனு தாக்கலில் அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியன் வங்கி, கூட்டு வட்டியை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்துமா என்று எம்.கே.பட்டாச்சாரியாவிடம் கேள்வி எழுப்பிய போது, வங்கிகள் கடன் கொடுப்பது டெபாசிட் பணத்தை வைத்துதான் என்றும், எனவே அரசு தங்களுக்கு பணம் கொடுத்தால் கூட்டு வட்டி செலுத்தியவர்களுக்கு மீண்டும் பணம் திரும்ப தரப்படும் எனவும் கூறினார்.

6,000 கோடி ரூபாய் கடன், 3 லட்சத்து 60 ஆயிரம் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: வட்டி மீதான வட்டி தள்ளுபடி - பெரும் கடனாளர்களுக்கு மட்டுமே நிவாரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.