ETV Bharat / business

60 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்

வாஷிங்டன்: 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி என்பது முன்பு கணிக்கப்பட்டதைவிட 4.5 விழுக்காடு வீழ்ச்சியை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா சந்திக்கும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி இதுவாகும்.

IMF forecast
IMF forecast
author img

By

Published : Jun 25, 2020, 1:18 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு நாடுகளிலும் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி கரோனா பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களைக் கணக்கில்கொண்டு சர்வதேச நிதியம் 2020-21ஆம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2020ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி என்பது 4.9ஆக இருக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச பொருளாதார அவுட்லுக் (WEO) கணித்த பொருளாதார வளர்ச்சியைவிட 1.9 விழுக்காடு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி என்பது முன்பு கணிக்கப்பட்டதைவிட 4.5 விழுக்காடு வீழ்ச்சியை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், "கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பது முன்பு கணித்தைவிட மிக மோசமாக உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வரலாற்றிலேயே முதல்முறையாக அனைத்து பிராந்தியங்களின் வளர்ச்சியும் நெகட்டிவ்-இல் இருக்கும். முதல் காலாண்டில் சீன பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனால், தற்போது விரைவாக அந்நாட்டு பொருளாதாரம் மீண்டுவருகிறது. 2020ஆம் நிதியாண்டில் சீனாவின் வளர்ச்சி 1.0ஆக இருக்கும்.

தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பல நாடுகளும் முன்பு கணிக்கப்பட்டதைவிட வேகமாக மீண்டுவருகின்றன. இதனால் 2021ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி என்பது 5.4ஆக இருக்கும்" என்றார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து கீதா கோபிநாத் கூறுகையில், "இந்தியாவில் நீண்ட காலம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும் பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்க முன்பு கணிக்கப்பட்டதைவிட அதிக காலம் எடுத்துக்கொள்வதாலும் இந்தியப் பொருளாதாரம் 4.5 விழுக்காடுவரை வீழ்ச்சியைச் சந்திக்கும்.

இருப்பினும், இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு, 2021ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6 விழுக்காடு வரை வளர்ச்சியடையும்" என்றார்.

1961ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் காணும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியாக இது உள்ளது. 2019ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 4.2 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளபோதும், கரோனாவுக்கு முறையான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் பொருளாதாரத்தில் நிச்சமின்மை தொடர்வதாக கீதா கோபிநாத் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பொருளாதார நிச்சயமற்ற தன்மை: புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.