நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், இயற்கை எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட துறைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக உள்ளன. தொழில்துறை உற்பத்தியைக் கணக்கிடுவதில் மேற்கூறிய துறைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன்) தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியடைந்திருந்தது. அந்த வளர்ச்சி ஜூலை மாதமும் நீடித்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம் 0.5 விழுக்காடு சரிவை சந்தித்த உற்பத்தி அடுத்தடுத்த மாதங்களிலும் (செப்டம்பர், அக்டோபர்) சரிவை நோக்கியே சென்றது.
இந்தச் சூழலில், நவம்பர் மாத கணக்கெடுப்பின்படி, சரிவை நோக்கிச் சென்ற தொழில்துறை உற்பத்தியானது 1.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 127.6 புள்ளிகளாக இருந்த தொழில்துறை உற்பத்தி 1.8 விழுக்காடு அதிகரித்து 128.4 புள்ளிகளாக இந்தாண்டு நவம்பர் மாதம் அதிகரித்துள்ளது.
தொழில்துறை உற்பத்தியின் முக்கியத் தூண்களாக விளங்கும் சுரங்கத் தொழில், உற்பத்தி ஆகியவை முறையே 1.7 விழுக்காடு, 2.7 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளன. இருப்பினும், மின்சாரத் துறை 5 விழுக்காடு அளவுக்குச் சரிந்துள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் நேற்று பேசிய நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரம் மீளும் என்றும் 2024ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரம் 5 டிரில்லியன் அளவிற்கு கட்டாயம் எட்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய பொருளாதாரம் மீளும் - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை