ETV Bharat / business

வங்கிகள் சீர்திருத்த சட்டத் திருத்தம் - ஒரு பார்வை

பல்வேறு வெளிப்புற மற்றும் உட்புற காரணிகளால் வங்கி மற்றும் நிதி அமைப்புகள் கடும் தத்தளிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக உள்கட்டமைப்பு பிணையமைத்தல் & நிதியியல் சேவைகள் லிமிடெட் (ஐஎல்& எஃப்எஸ்), பஞ்சாப் மற்றும் மஹாராஷ்ட்ரா கூட்டுறவு (பிஎம்சி), ஃபியாஸ்கோ வங்கி ஆகியற்றின் தோல்வி மற்றும் யெஸ் வங்கியின் வீழ்ச்சி ஆகியவை இதற்கு சிறு உதாரணங்கள். கார்ப்பரேட் ஆட்சிமுறையை கட்டுப்படுத்துதல், நிதியியல் துறைகளில் உள்ள இடைத்தரகர்களுக்கான சட்டவிதிமுறைகளை விரிவுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறையை பலப்படுத்துதல் ஆகியவற்றோடு சேர்த்து, இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குதல் ஆகியவை அவசியமாகிறது.

RBI
RBI
author img

By

Published : Jun 29, 2020, 6:04 PM IST

ஹைதராபாத்: சவால்களை எதிர்கொண்டு வங்கியியல் அமைப்பை பலப்படுத்துவதுதான் நிலைத்த வளர்ச்சியை அளிக்கும். பொருளாதார வளர்ச்சியில் நிதியியல் அமைப்பின் முக்கிய பங்கை உறுதி செய்யும் வகையில், அதை பாதுகாப்பாகவும், நிலைத்தன்மை கொண்டதாகவும் தொடர செய்வதற்கு அரசும், ஒழுங்குமுறை அமைப்புகளும் பல வழிமுறைகளை செயல்படுத்துகின்றன.

பல்வேறு வெளிப்புற மற்றும் உட்புற காரணிகளால் வங்கி மற்றும் நிதி அமைப்புகள் கடும் தத்தளிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக உள்கட்டமைப்பு பிணையமைத்தல் & நிதியியல் சேவைகள் லிமிடெட் (ஐஎல்& எஃப்எஸ்), பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி), ஃபியாஸ்கோ வங்கி ஆகியற்றின் தோல்வி மற்றும் யெஸ் வங்கியின் வீழ்ச்சி ஆகியவை இதற்கு சிறு உதாரணங்கள்.

இதே போல பல மாநில கட்டமைப்பக் கொண்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் தோல்வியால், இவற்றை நம்பியிருக்கும் சிறு சேமிப்பு வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை பொருளாதார வளையத்துக்குள் கொண்டு வரும் மிகப் பெரிய பணியை கூட்டுறவு வங்கிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சிக்கல்களால் நிதியியல் அமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், வளர்ச்சியிலும் தொழிற்துறையிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் அமைப்பு ரீதியில் நம்பிக்கைத்தன்மை வலுவிழப்பதால் அப்பாவி பங்குதாரர்கள் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

கார்ப்பரேட் ஆட்சிமுறையை கட்டுப்படுத்துதல், நிதியியல் துறைகளில் உள்ள இடைத்தரகர்களுக்கான சட்டவிதிமுறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஒழுங்குமுறையை பலப்படுத்துதல் ஆகியவற்றோடு சேர்த்து, இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குதல் ஆகியவை இந்த நேரத்தில் அவசியமாகிறது.

தனியார் வங்கிகள் மீதான அவசரச் சட்டத்தின் தாக்கம்:
இந்த சூழல் காரணிகளை மனதில் வைத்து, தனியார் வங்கிகளில் பாதிப்புகளைத் தடுக்கும் வண்ணம் தகுந்த நேரத்தில் தலையிட்டு தீர்வுகள் வழங்கும் அதிகாரத்தை ரிசர்வ் வங்கிக்கு வழங்கும் பொருட்டு, ஒரு அவசரச்சட்டத்தின் வழியாக வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (பிஆர்ஏ) 1949 -ஐ அரசு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பிஆர்ஏ சட்டத்தின் 45வது பிரிவில் குறிப்பிடத்தக்க சீரமைப்பு செய்யப்பட்டு, அதன் மூலம் காலம் தாழ்த்தி தவணை செலுத்தும் நிலையிலிருந்தும், டெபாசிட்களை திரும்பப் பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிப்பதிலும் இருந்து பலவீனமடைந்த வங்கிகளை மீட்க மறுகட்டமைப்பு அல்லது ஒருங்கிணைவு திட்டத்தை வகுக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

முன்னதாக, பலவீனமாக இருக்கும் ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள்/கடனாளிக்கு காலம் தாழ்த்தி தவணை செலுத்தும் வசதியை வெளிப்படையாக அமல்படுத்திய பின்னரே, அதன் மீது பிரிவு 45 ஐ ரிசர்வ் வங்கி செயல்படுத்த முடியும். முதலில் காலம் தாழ்த்தி தவணை செலுத்தலை அமல்படுத்தி, ஒரு நிர்வாகியை பணியமர்த்தி அதன்பின் சேமிப்புகளை திரும்பப் பெறும் வசதியை ரத்து செய்த பின்னரே, அந்த வங்கியை காப்பாற்றும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள முடியும். சமீபத்தில் யெஸ் வங்கி மீது இது போன்ற நடைமுறை தான் மேற்கொள்ளப்பட்டது.

காலம் தாழ்த்தி தவணை செலுத்தும் வசதியை அமல்படுத்துவதால் வங்கியின் செயல்பாடுகள் தடைபடும், டெபாசிட் செய்வதற்கு வரைமுறை ஏற்படுவதால், நிதி புழக்கம் குறைந்து பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுமட்டுமின்றி வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்களின் அன்றாட நிர்வகிப்பு பணிகள் பாதிக்கப்படுவதோடு, அவர்களிடையே மிகப் பெரிய சமூக அச்சம் ஏற்படும்.

தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையால், தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பே, அந்த வங்கியை மறுகட்டமைப்பு செய்தல், ஒருங்கிணைவு செய்தல் மற்றும் மறுபரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்க முடியும். தற்போது நோய்ப்பரவலால் ஏற்பட்டுள்ள பெரும் சரிவுகளை அடுத்து, மிகப் பெரிய நிதி பாதிப்புகளைத் தடுக்கும் விதமாக துல்லியமாக கண்காணித்தல் மற்றும் ஒழுங்கமைப்பு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

இந்த அவசரச் சட்டத்தின் விளைவுகள்; பிஆர்ஏ சட்டப்பிரிவு 45 மூலம் ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படும் வங்கிகள் தங்களது மேலாண்மையை மறுசீரமைப்பு செய்து கொள்ள முடியும், இதன் மூலம் ஒழுங்குமுறை அமைப்புகளின் தலையீட்டால் சிக்கல்களை தீர்ப்பதை தடுக்க முடியும்.

கூட்டுறவு வங்கிகளில் பாதிப்புகள்:
வங்கியியல் ஒழுங்குமுறை (திருத்த) சட்டமானது, பிஆர்ஏ 1949 பிரிவு 56 ஐ திருத்தம் செய்துள்ளது, இதன் படி கூட்டுறவு வங்கிப் பிரிவை கண்காணிக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும். இதன் மூலம் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
இந்த புதிய விதிகள் அனைத்தும் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கும், 58 பல மாநில கிளைகள் கொண்ட கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். இதன்மூலம் மொத்த வங்கித் துறை சேமிப்பான ரூ.138 ட்ரில்லியன் பணத்தில் அடங்கியுள்ள ரூ. 4.84 ட்ரில்லியன் (சந்தை மதிப்பு 3.5 சதவீதம்) பணத்தை சேமிப்பாக வைத்துள்ள 86 மில்லியன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.
இதுவரை கூட்டுறவு வங்கித்துறை மேலாண்மை மிக பலவீனமாக இருந்தது தான் இந்த வீழ்ச்சிக்கு/திருப்தியில்லாத வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. கூட்டுறவு என்பது மாநில கட்டுப்பாட்டுத் துறை என்பதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது.

பி.ஆர்.1949 சட்டத்திலுள்ள பிரிவு 10ஏ விதிகள் இதற்கு ஏற்புடையதாக இல்லை. தலைமை செயல் அதிகாரி/போர்டு உறுப்பினர்களின் பதவி அளவுகோல்களும் இச்சட்டத்தின் பிரிவு 10பி மூலம் வரையறுக்கப்படவில்லை.

ஆயினும் இந்த புதிய சட்டத்திருத்தமானது, கூட்டுறவு சொசைட்டிக்களின் மாநில பதிவாளர்களின் அதிகாரங்களை பாதிக்காது, அத்துடன் நீண்டகால வேளான் மேம்பாட்டுக் கடன் திட்டத்தையும், தொழில்கடன்களுக்கான நிதியை அளிக்கும் 90,000 முதன்மை வேளான் கடன் சொசைட்டிக்கள் (பிஏசிஎஸ்) அல்லது கூட்டுறவு சொசைட்டிக்களின் செயல்பாடுகளுக்கு புதிய சட்டத்திருத்தம் பொருந்தாது. இவை அனைத்தும் கூட்டுறவு சொசைட்டிக்கள் சட்டம் 1904 படி தொடர்ந்து செயல்படும்.

இந்த துறை மீதான முடிவானது, ஜூன் 2015 வெளியிடப்பட்ட ‘நகர்ப்புற வங்கிகள் மீதான உயர் மட்ட கமிட்டி (தலைவர், ஆர்.காந்தி) அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றுள், நகர்புற கூட்டுறவு வங்கிகளை சிறு நிதி அளிக்கும் வங்கிகளாக மாற்றும் திட்டமும் அடங்கும். இந்த சட்டத் திருத்தத்திற்கு பிறகு, சக்தி வாய்ந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் சிறிய வர்த்தக வங்கிகள் போல, சிறு நிதி வங்கிகளாக்கப்பட்டு, அதிகளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும்.

முன்னேற்றப் பாதை:
இந்த சட்டத்திருத்தமானது, சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட நோய்ப்பரவல் மற்றும் புவிசார் அரசியல் சவாலை எதிர்கொண்டு வங்கியியல் துறையை நவீனமாக்கி வளமையாக்க வழிசெய்யும் ‘இந்தியாவில் வர்த்தக வங்கிகளின் மேலாண்மை’ என்ற கலந்தாய்வு அறிக்கையுன் இணங்கும் வகையில் உள்ளது. நமது பொருளாதாரத்தை $5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவதற்கான நீண்ட கால சவால்களை எதிர்கொள்வதற்காக இது உருவாக்கப்பட்டது.

ஆனால் அவசரச்சட்டமானது மத்திய வங்கிக்கு சவாலாக இருக்கவுள்ளது. தற்போது கவனித்து வரும் 141 வங்கிகளை சீரமைத்து, அதிகளவிலான கூட்டுறவு வங்கிகளை இணைத்து, இவற்றின் ஆதாரமாக இருக்கும் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
அவர்களது சமூக பாதிப்பானது, பொருளாதாரத்தில் எதிரொலிப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆனாலும் தற்போது கூட்டுறவு வங்கிகள் தொலைதூர கண்காணிப்பு வழிவகை செய்யும் தொழில்நுட்பங்களால் கட்டமைக்கப்படாது பெரிய சவாலாக உள்ளது.
இது போன்ற புவிவியல் ரீதியாக வேறுபட்டிருக்கும் கூட்டுறவு வங்கிகளை விரிவுபடுத்தி மேம்படுத்த அதிகளவிலான மனிதவளம் தேவைப்படுகிறது. ஆனால் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட சேமிப்பு காப்பீட்டு தொகை 5 லட்சம் உறுதியாவதுடன், கூட்டுறவு வங்கிகளின் கிளைகளிலேயே அன்றாட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

குறிப்பு: இந்த சிறப்புக் கட்டுரை ஐ.ஐ.ஆர்.எம். ஹைதராபத் நிறுவனத்தின் பேராசிரியர் கே. ஸ்ரீனிவாச ராவ் எழுதியது. இந்த கருத்துக்கும் ஈடிவி பாரத் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை.

இதையும் படிங்க: வீட்டுக் கடனை காப்பீடு செய்வது சரியான முடிவா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.