ETV Bharat / business

ஒன்றிய அரசு ஈட்டிய ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு தெரியுமா? - ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய்

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1.16 லட்சம் கோடியை ஒன்றிய அரசு ஈட்டியுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டின் இதே மாதத்தில் ஈட்டிய வருவாயை விட 33 விழுக்காடு உயர்வாகும்.

ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய்
ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய்
author img

By

Published : Aug 1, 2021, 5:49 PM IST

டெல்லி: ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் ரூ.1,16,393 கோடியாக உள்ளது.

இதில் ஒன்றிய சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 22,197 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 28,541 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 57,864 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ. 27,900 கோடியையும் சேர்த்து) மற்றும் செஸ் வரி ரூ. 7,790 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ. 815 கோடி உட்பட) ஆகும்.

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து, ஒன்றிய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ. 28,087 கோடியையும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.24,100 கோடியையும் இந்த மாதத்தின் போது ஒன்றிய அரசு வழங்கியது.

ஆகஸ்ட் 1, உங்கள் பர்ஸை பதம் பார்க்கும்!

கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், சரக்கு மற்றும் சேவை வரியின் வருவாய் இந்தாண்டு 33 விழுக்காடு அதிகமாக உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் வருவாய் கடந்த ஆண்டைவிட 36 விழுக்காடும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட வருவாய் 32 விழுக்காடும் அதிகம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியின்படி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட நடப்பாண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாடு 36 விழுக்காடு நேர்மறை வளர்ச்சியையும், புதுச்சேரி 6 விழுக்காடு எதிர்மறை வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.

தொடர்ந்து எட்டு மாதங்களாக ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், 2021 ஜூன் மாத வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாக ஏற்பட்டது.

ஜூன் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல், நடப்பாண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையது.

கரோனா தொற்றினால் மே மாதம் பெரும்பாலான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முழு அல்லது பகுதி நேர பொது முடக்கத்தைக் கடைப்பிடித்தன. எனினும், தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 2021, ஜூலை மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1 கோடியைக் கடந்துள்ளது. இது பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதை எடுத்துரைக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.