தொழில்துறை மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தில் மேலும் சரிவு ஏற்படவாய்ப்புள்ளது. ஏனெனில் தொழில்துறை சார்ந்த உற்பத்தி பலவீனமாக இருக்கிறது. அதன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி மொத்த மதிப்பின் அடிப்படை விலைகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் முறையே 4.7 சதவீதம் மற்றும் 4.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அடுத்த நிதியாண்டு (2020-2021) முதலாமாண்டில் முறையே 5 சதவீதம் மற்றும் 4.9 சதவீதமாக இருக்கும்.
இருப்பினும், வேளாண்மை மற்றும் சேவைகள் போன்ற துறைகள் அடுத்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்தை அடைய முடியும். உள்நாட்டு தேவை, முதலீட்டு செயல்பாடு மற்றும் எண்ணெய் அல்லாத வர்த்தக ஏற்றுமதிகள் ஆகியவை தொகுதி விரிவாக்கத்தின் அடிப்படையில் வளர்ச்சி குறைந்து காணப்படும்.
இந்திய பொருளாதாரத்தில் சுணக்கம் காணப்படுகிறது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் காணப்படுகிறது. அதன் தாக்கம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் எதிரொலிக்கிறது.
இதையும் படிங்க: உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.266 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு