ETV Bharat / business

சீன இறக்குமதி டயர்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி? வர்த்தக அமைச்சகம் - Tyre Import Tax

டெல்லி: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லாரி, பேருந்துகளுக்கான டயர்கள் மீது மிகை இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்துக்கு வர்த்தகத் துறை பரிந்துரைத்துள்ளது.

டயர்
author img

By

Published : Mar 29, 2019, 11:36 AM IST

இந்தியாவில் லாரி, பேருந்து டயர் உற்பத்தியாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வர்த்தகத் துறை அமைச்சகம் தனது பரிந்துரையில் கூறியுள்ளது. சீனாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் டயர்களால் உள்நாட்டில் அப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிப்படைவதாக இந்திய டயர் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு புகார் அளித்தது.

இதனை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் வர்த்தக விவகாரங்கள் குறைதீர்ப்பு இயக்குநரகம் விசாரித்தது. முடிவில், லாரி, பேருந்துகளுக்கான டயர்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்க வேண்டும். இதற்காக அந்த டயர்கள் மீது மட்டும் மிகை இறக்குமதி தடுப்பு வரியை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வரி விதிக்கப்படும்போது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அந்த வகை டயர்களுக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்படும். இதன் மூலம் அவற்றின் விலை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதேவகை டயரின் விலையை விட அதிகரிக்கும். எனவே, இந்தியாவில் உள்ள இறக்குமதியாளர்கள் யாரும் சீன டயர்களை இறக்குமதி செய்யமாட்டார்கள்.

இதனால், சீன டயர்கள் இந்தியாவுக்கு வருவது தடுக்கப்படுவதுடன், இந்தியாவில் டயர் உற்பத்தி நிறுவனங்களின் நலன்களும் பாதுகாக்கப்படும். இது தொடர்பாக இறுதி முடிவை மத்திய நிதியமைச்சகம் மேற்கொள்ளும்.

சீனாவில் டயர் உற்பத்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அதிக அளவில் மானியம் வழங்குகிறது. அதன் மூலம் அவர்களால் இந்தியாவுக்கு குறைந்த விலையில் டயர்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. இதுபோன்ற அதிக மானிய உதவியுடன் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், நம் நாட்டில் குவிக்கப்படுவதைத் தடுக்கவும் மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கப்படுகிறது.

2014-15ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 30 ஆயிரத்து 665 டன் டயர் இறக்குமதி செய்யப்பட்டது. இதுவே 2016-17ஆம் ஆண்டில் 81 ஆயிரத்து 896 டன்னாக அதிகரித்தது.

இதுதவிர சீனாவுடான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதாவது சீனா நமது நாட்டுக்கு அதிக அளவில் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், நமது நாட்டில் இருந்து குறைவாகவே இறக்குமதி செய்து கொள்கிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.