மத்திய அரசு அறிவித்துள்ள கரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது நாள் அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
முதல் நான்கு நாட்களில் சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், இன்று ஊரக பகுதி மேம்பாட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, 100 நாள் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு(MANREGA) உடனடியாக ரூ. 40,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தங்கள் கிராமத்திற்கு திரும்பச் சென்ற லட்சக்கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரவுண்ட் அப்: நிதியமைச்சரின் நான்கு நாள் அறிவிப்புகள் ஒரு பார்வை!