கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்த இந்த அறிவிப்பால், திறந்த சந்தையில் கோதுமை விநியோகம் அதிகரிக்கும், இதன் மூலம் அதிகப்படியான தானியங்கள் சந்தையில் புழங்கும் என்று தெரிகிறது. இதோடு அதிகப்படியான தானியத்தையும் சேமிக்க முடியும். இதோடு இந்திய மற்றும் மாநில அரசுகளின் சேமிப்புகளையும் உயர்த்த முடியும் என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இதே நேரம் அரசு திறந்தவெளி கொள்முதல் மூலம் கோதுமை 10 மில்லியன் டன் ஆகவும், இதுவே நெல் கொள்முதல் 2 மில்லியன் டன் ஆகவும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த இறக்குமதி வரி அதிகரிப்பால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் லாபமும், அதே சமயம் வியாபாரிகளும் உள் நாட்டிலேயே கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.