இந்தியாவின் பொருளாதார நிலவரம் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திபின்போது விரிவாகப் பேசினார். நாட்டின் பணவீக்க விகிதம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் இதன் விளைவுகள் எத்தகையத் தாக்குதலை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை என கவலைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்காற்றும் மாநிலங்கள், நகரங்களில்தான் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் நாட்டின் உற்பத்தி 17 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற அசாதாரண சூழலின் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடான ஜி.டி.பி. பூஜ்ஜியத்துக்கு கீழ் சரியும் என ரிசர்வ் வங்கித் தெரிவித்துள்ளது. முன்னதாக, மூடீஸ் கோல்ட் மேன் சாக்ஸ் போன்ற சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் லாக்டவுன் காரணமாக இந்திய பொருளாதாரம் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையை அடிப்படையாகவே இந்த கணிப்பிற்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: வாடிக்கையாளர்களைக் கவர மாருதி சுசூகியின் புதிய திட்டம்!