டெல்லி: ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் நிதிநிலை காலாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, நிதியறிக்கை மதிப்பீட்டில், 83.2 விழுக்காட்டை எட்டியுள்ளது.
இக்காலாண்டில், நிதிப் பற்றாக்குறை, 6.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இதுவே, 2019ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 61.4 விழுக்காடாக இருந்தது.
2020 பிப்ரவரி மாதத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த, நாட்டின் வரவு - செலவு திட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை, 7.96 லட்சம் கோடி ரூபாய் என, அரசு நிர்ணயித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.5 விழுக்காடாகும்.
எட்டு தொழிற்துறையின் உற்பத்தி 15 விழுக்காடு வரை சரிவு
இருப்பினும், கரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை கணக்கில் கொண்டு, இந்த புள்ளி விபரங்கள் கணிசமாக திருத்தப்பட வேண்டியதிருக்கும். 2019- 20ஆம் நிதியாண்டில், ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில், நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.6 விழுக்காடாக உயர்ந்தது.
அரசாங்கத்தின் மொத்த செலவு ஜூன் மாத இறுதியில் ரூ. 8,15,944 லட்சம் கோடி அதாவது 26.8 விழுக்காடாக இருந்தது. 2019 நிதியாண்டின் இதே காலகட்டத்தில், மொத்த செலவு 25.9 விழுக்காடாக இருந்தது.
ஜூன் 2020 வரை மத்திய அரசு வரிப் பகிர்வாக ஒரு லட்சத்து 34ஆயிரத்து 43 கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு கொடுத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ. 14,588 கோடி குறைவாகும்.
பிட்காயின் மோசடிக்காக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்த மூவர் கைது!
மொத்த வருவாய் செலவில், ஒரு லட்சத்து 60ஆயிரத்து 493 கோடி ரூபாய் வட்டி செலுத்துதலுக்காகவும், முக்கிய மானியங்களுக்காக 78ஆயிரத்து 964 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில், கரோனாவால் நாடு முடக்கப்பட்டதை அடுத்து, மோசமான வருவாய் நிலை ஏற்பட்டதால், இந்த சரிவு ஏற்பட்டது.