ETV Bharat / business

கேரள வங்கி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் பினராயி விஜயன்! - Pinarayi Vijayan launches Kerala Bank

திருவனந்தபுரம்: மாவட்ட கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட கேரள வங்கி தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.

Chief Minister Pinarayi Vijayan launches Kerala Bank

author img

By

Published : Dec 7, 2019, 12:49 PM IST

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (Left Democratic Front) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக பினராயி விஜயன் உள்ளார்.

இடதுசாரி தலைவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை ஒன்றிணைத்து கேரள வங்கி தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ஆட்சிக்கு வந்ததும், பினராயி விஜயன் கேரள வங்கி அமைக்கும் பணிகளை தொடங்கினார்.

இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைக்கும்பட்சத்தில் அது வளர்ச்சியை பாதிக்கும், வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என அக்கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கேரள வங்கிக்கு எதிராக திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நவ. 29ஆம் தேதி தள்ளுபடி ஆனது. அதையடுத்து கேரள வங்கி அமைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்தது. இந்த நிலையில் நேற்று கேரள வங்கி தொடர்பான அறிவிப்பை பினராயி விஜயன் முறைப்படி அறிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் இந்த அறிவிப்பு வெளியானது.

விழாவில் பினராயி விஜயன் பேசுகையில், “13 மாவட்ட வங்கிகளை இணைத்து கேரள வங்கி உருவாக்கப்பட உள்ளது. இந்த வங்கி நவீன காலத்துக்கு ஏற்ற வகையில், பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட இருக்கிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கேரளத்தினர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் பணம் அனுப்ப, முதலீடு மற்றும் வைப்புத் தொகை பராமரிக்க என இந்த வங்கி பல வகைகளில் உதவியாக இருக்கும். இது மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும்” என்றார்.

அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன் கூறும்போது, “கூட்டுறவு வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டதால் மாநிலத்தின் வளர்ச்சி பெரிய அளவில் அதிகரிக்கும். கேரள வங்கியுடன் மல்லப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி இணைக்கப்படவில்லை. அந்த வங்கி ஐக்கிய ஜனநாயக முன்னணி கைவசம் உள்ளது” என்றார்.

முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பு மூலம் கம்யூனிஸ்டுகளின் நீண்ட நாள் கனவு நனைவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 121 வீடுகள் கட்டி கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராமோஜி குழுமம்!

Intro:Body:

Chief Minister Pinarayi Vijayan launches Kerala Bank

Thiruvananthapuram: The Kerala Bank, an amalgamation of district co-operative banks in the state, was formally launched by Chief Minister Pinarayi Vijayan on Friday, fulfilling a long pending dream of the LDF.

It will provide "unlimited opportunities" for the state and also facilitate transactions in other countries with considerable population of Keralites, Pinarayi Vijayan said at a function.

According to government sources, 13 district co-operative banks (DCBs) are being merged with the Kerala State Co-operative Bank for forming the Kerala Bank. The UDF had been opposing the idea saying it would destroy the traditional cooperative sector. UDF boycotted the function.

"All district cooperative banks have strong base. And when all these merge together and form one bank, it will soon become the biggest bank in the state," Pinarayi Vijayan said. The chief minister also added that the bank will have all the latest facilities, including Core Banking. He offered to discuss with the opposition parties and clear their apprehensions. 

The bank became a reality with the Kerala High Court on November 29 dismissing a batch of petitions against it.

Minister for Cooperation Kadakampally Surendran had said the setting up of the bank opens up a huge potential for the development of the state. All the DCBs barring the Malappuram District Cooperative Bank controlled by the UDF have approved the government's proposal.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.