2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
பொருளாதாரத் துறை சார்ந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:
- நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
- நிர்விக் (NIRVIK) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுமதி திட்டங்கள் மேம்படுத்தப்படும்
- மின்னணு பாகங்கள் உற்பத்திக்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
- தனியார் துறையில் டேட்டா மையப் பூங்காக்கள் உருவாக்க மத்திய அரசு ஊக்குவிக்கும்
- ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஆப்டிக்கல் பைபர் இணைய சேவை வசதி நடப்பாண்டுக்குள் கொண்டு சேர்க்கப்படும்
- பாரத் நெட் இணைய சேவை திட்டத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- தேசிய கைத்தறி தொழில்நுட்பத் திட்டத்திற்கு ஆயிரத்து 480 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
- முதலீட்டுகளை எளிமைப்படுத்தி அதற்கான வழிமுறைகளை மேம்படுத்தும் வகையில் புதிய பிரிவு விரைவில் உருவாக்கப்படும்
- ஐந்து புதிய திறன்மிகு நகர்கள் அரசு - தனியார் திட்டத்தில் அமைக்கப்படும்
இதையும் படிங்க: பட்ஜெட் 2021: புதிய கல்விக்கொள்கை விரைவில் அமல், கல்விக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு