பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, கடந்த மாதம் 69 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இதில், 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை அலைவரிசை, பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டம், சொத்து அடமான திட்டம் உள்ளிட்டவையும் அடங்கும்.
மேலும் மும்பை, டெல்லியில் மட்டும் சேவையளித்துவரும் எம்.டி.என்.எல். நிறுவனத்தை பிஎஸ்என்எல்லுடன் இணைப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பிஎஸ்என்எல்லை நஷ்டப்பாதையிலிருந்து திருப்பி, இரண்டு ஆண்டுகளில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்காகத்தான் இதுபோன்ற திட்டங்களை அரசு வகுத்துள்ளது.