ETV Bharat / business

உத்தரகாண்டில் வங்கிகள் இயங்கும்! - உத்தரகாண்டில் வங்கிகள் இயங்கும்!

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI  Bank working hours  Dr Vijay Kumar Jogdande  Coronavirus in India  Social distancing  Pithoragarh  Uttarakhand  Banks in Uttarakhand will be operational  உத்தரகாண்டில் வங்கிகள் இயங்கும்!  கரோனா பாதிப்பு, வங்கிகள் முடக்கம்

author img

By

Published : Apr 4, 2020, 10:41 AM IST

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுக்க 21 நாட்கள் பூட்டுதல் (லாக்டவுண்) அறிவிக்கப்பட்டுள்ளது. இது வருகிற 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் உத்தரகாண்டில் வங்கிப் பணிகள் தடைப்பட்டது.

தற்போது வங்கிப் பணிகள் மீண்டும் தொடர்கிறது. வாடிக்கையாளர்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் வங்கிகள் இயங்குகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கும் வங்கிப் பணிகள் மதியம் ஒரு மணி வரை தொடர்கிறது.

இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மாவட்ட ஆட்சியர் விஜய் குமார் ஜோக்தாண்டே பார்வையிட்டார். அப்போது, “கரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சமூக தூரம் மற்றும் சானிடைசர் வழங்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.

உத்தரகாண்ட் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்கும் சிறப்பு நுழைவுச் சீட்டும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸூக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: கேரள நிதி நிறுவனம் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் கடன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.