முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ், கரோனா தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிப்பை சந்தித்துள்ளதால், தனது ஊழியர்களுக்கு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தற்காலிக சம்பள குறைப்பு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பளக் குறைப்பு உயர் அலுவலர்கள் மட்டத்தில் இருந்து கீழ்மட்ட பணியாளர்கள் வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அடிப்படை பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான ஊதியம் குறைக்கப்படாது எனவும் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயர்மட்டத்தில் உள்ள அலுவலர்களுக்கு 20 விழுக்காடு அளவுக்கு சம்பள குறைப்பு இருக்கும் எனவும், தொடக்க நிலையில் உள்ள பணியாளர்களுக்கு 5 விழுக்காடு அளவுக்கு ஊதியம் குறைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் பணிகளைத் தொடங்கவுள்ள கர்நாடகாவின் கரோனா ஹாட்ஸ்பாட் தொழிற்சாலை