ETV Bharat / business

பொருளாதார மறுமலர்ச்சிக்கு வலுவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்! - பொருளாதார வீழ்ச்சி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) வளர்ச்சி விகிதம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. உள்கட்டமைப்பு தொழில்கள் உட்பட 8 பெரிய தொழில்துறை அலகுகளின் முன்னேற்றம் சரிந்துள்ளது. இவை, நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது தவிர, சர்வதேச  நிலவரமும் பீதி அடையச் செய்கிறது.

stronger reforms for economical revival, பொருளாதார மறுமலர்ச்சிக்கு வலுவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஜிஎஸ்டி, பொருளாதார வீழ்ச்சி, டாலருக்கு நிகரான ரூபாய்
indian economy fall
author img

By

Published : Dec 18, 2019, 5:55 PM IST

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) வளர்ச்சி விகிதம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. உள்கட்டமைப்பு தொழில்கள் உட்பட 8 பெரிய தொழில்துறை அலகுகளின் முன்னேற்றம் சரிந்துள்ளது. இவை, நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது தவிர, சர்வதேச நிலவரமும் பீதி அடையச் செய்கிறது. அமெரிக்க - சீனா வர்த்தகப்போர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் குறைத்து வருகிறது. நிலைமையை உடனடியாக சரிசெய்யாவிட்டால் ஒட்டுமொத்த அமைப்பும் மேலும் மந்தகதிக்கு சென்றுவிடும் என்று சர்வதேச மதிப்பீட்டு முகமை எச்சரித்துள்ளது.

என்ன ஆனது ஜிடிபி

நடப்பு நிதியாண்டில் (2019-20) ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை, ஆறாண்டுகளில் இல்லாதவகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி 4.5% சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்த விகிதம் 2018-19 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 7.1% சதவிகிதமாக ஆக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 4.8%; இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 7.5% சதவிகிதமாக ஆக இருந்தது.

stronger reforms for economical revival, பொருளாதார மறுமலர்ச்சிக்கு வலுவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஜிஎஸ்டி, பொருளாதார வீழ்ச்சி, டாலருக்கு நிகரான ரூபாய்
ஜிஎஸ்டி (கோப்புப் படம்)

அக்டோபர் மாதத்தில் 8 பெரிய உள்கட்டமைப்பு தொழில்களில், உற்பத்தி 5.8% குறைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி, நுகர்வோர் தேவை, தனியார் முதலீடு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் சரிவு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு இதைவிட இன்னும் என்ன ஆதாரங்கள் நமக்கு தேவை?

Q4 காலாண்டு முடிவில் இந்திய பொருளாதார வளர்ச்சி 4.3 விழுக்காடு-நோமூரா கணிப்பு

ஜிஎஸ்டி வருவாய்

உலகளாவிய குறைந்து வரும் தேவைகள், அமெரிக்க - சீனா வர்த்தகப்போர் ஆகியன, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சரிவை நோக்கித் தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தருணத்தில், அரசின் வருவாய் மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. 2019-20ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிவசூல் பற்றாக்குறை, ரூ. 2.7 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தை புதுப்பிக்கும் முயற்சியாக, பல்வேறு திட்டங்களுக்கான செலவினங்களை அரசு அதிகரித்துள்ளது.

இது, நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (யுஎன்சிடிஏடி), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2019 - 20ஆம் ஆண்டில் 6% சதவிகிதமாக ஆகக் குறைந்துவிடும் என்று கணித்துள்ளது; இது, 2018இல் 7.4% சதவிகிதமாக ஆக இருந்தது. உலக வங்கியும், வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகளை 7.5% சதவிகிதம் என்பதிலிருந்து 6% சதவிகிதமாக ஆக குறைத்தது. சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் - மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, இதுவரை இல்லாத ஒன்றாக 5.8% சதவிகிதம் என இந்தியாவிற்கான மதிப்பீட்டை குறைத்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) 7.1% என்பதில் இருந்து 6.1% ஆக குறைத்தது. உள்நாட்டு சேவைகளுக்கான தேவை குறைவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2019 - 20ஆம் ஆண்டில் 6% சதவிகிதமாக ஆகக் குறைந்துவிடும் என்று கணித்துள்ளது; இது, 2018இல் 7.4% சதவிகிதமாக ஆக இருந்தது

தொழில்துறை உற்பத்தி குறைவு, வேலையின்மை, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பிற துறைகளில் விற்பனை குறைந்து வருவது, மற்றும் அமெரிக்க - சீனா வர்த்தக போட்டியால் நமது ஏற்றுமதியில் மந்தம் ஆகியன, சர்வதேச பொருளாதாரச் சந்தையில் இந்தியாவை முன்னேறாமல் தடுக்கின்றன. பொருளாதார மந்தநிலையை சமாளிக்க, கடந்த 3 - 4 மாதங்களில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் வளர்ச்சியை மேம்படுத்த 32 முடிவுகளை அரசு அறிவித்தது.

வரும் 18ஆம் தேதி கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் - வரிகளை உயர்த்த மத்திய அரசு முடிவு

தொலைநோக்கு

வரும் 2024-25 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்ற, மத்திய அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) முதன்முறையாக, ரெப்போ வட்டி விகிதத்தை 2019ஆம் ஆண்டில் ஐந்து முறை குறைத்தது. விளிம்பு நிலை வசதி, விகிதத்தையும் வங்கி வீதத்தையும் 5.40% சதவிகிதமாக ஆக குறைத்தது. வணிக வங்கிகளுக்கு தேவைப்படும்போது, ரிசர்வ் வங்கி இந்த விகிதங்களுக்கு நிதியளிக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறைவாக கடன் பெறவும், தனிநபர்களுக்கும், பிற நிறுவனங்களுக்கும் கடன் வழங்கவும் உதவும். இக்கடன்கள் தேவை, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். ரிசர்வ் வங்கி பல ஆண்டுகளாக வட்டி விகிதங்களைக் குறைத்து வந்தபோதும், வங்கிகள் அந்த பலனை நுகர்வோருக்குத் தரவில்லை. இம்முறை, குறைந்த வட்டி விகிதத்தில் சில்லறை கடன்களை வழங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

ரிசர்வ் வங்கி பல ஆண்டுகளாக வட்டி விகிதங்களைக் குறைத்து வந்தபோதும், வங்கிகள் அந்த பலனை நுகர்வோருக்குத் தரவில்லை

இது வீட்டுக்கடன், ஆட்டோமொபைல் மற்றும் பிற சில்லறை கடன்களுக்கான மாத தவணைத்தொகை (இஎம்ஐ) அளவை குறைக்கவும், தேவையை மேலும் அதிகரிக்கவும் செய்யும். தேவையை சமாளிக்க முதலீடுகள் அவசியமாகிறது. சூழ்நிலைகளை பொருத்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று அரசு நம்புகிறது.

வாகனச் சந்தையின் வீழ்ச்சி

இந்திய வர்த்தக மற்றும் பொருளாதாரச் சந்தையில் இந்திய வாகனத் தொழில், சுமார் 49% சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இத்தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறத்தாழ 3.7 கோடி மக்களுக்கு வேலையை தருகிறது. வாகனத்துறையானது எஃகு, அலுமினியம் மற்றும் டயர் தொழில்களுடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது. வாகனங்களுக்கான தேவை குறைந்துவிட்டால், மேற்கண்ட தொழில்களும் பாதிக்கப்படும். கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 2019 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் பயணிகள் வாகன விற்பனை சுமார் 18.42% சதவிகிதமாக குறைந்துள்ளது.

அனைத்து வகை வாகனங்களின் விற்பனை 12.35% சரிந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. வாகனத் தொழிலில் நிலவும் சிக்கலுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை, ஆகஸ்ட் 23இல் அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, புதிய வாகனங்கள் வாங்குவதற்கான தடையை அரசு துறைகள் நீக்கியுள்ளன. ஆகஸ்ட் 30இல், பத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து, நான்கு பெரிய வங்கிகளாக அரசு மாற்றியது. இந்த இணைப்பு, வங்கிகளின் நிதி கிடைப்பதை அதிகரிக்கும் மற்றும் அதிக கடன் வழங்க வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

அனைத்து வகை வாகனங்களின் விற்பனை 12.35% சரிந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது

பொதுமக்களுக்கு எளிதில் கடன் வழங்க ஏதுவாக, மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.70,000 கோடியை வழங்கும். ஆண்டு வருமானம் ரூ. 2 கோடி முதல் ரூ.5 கோடி வரையுள்ள, ஆர்வம் கொண்ட தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, கடந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு, மிகைவரியை (சர்சார்ஜ்) ஆண்டுக்கு 15% என்பதை 25% ஆக உயர்த்தியது. 5 கோடி அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ள தொழில்முனைவோர் 37% மிகை வரியை தவறாமல் செலுத்த வேண்டும்.

வாகன விற்பனை சரிவு - உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.பி.ஐ) மத்திய நிதிநிலை அறிக்கை வெளியான உடனேயே இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து ரூ.24,000 கோடியை திரும்பப் பெற்றனர். அதன் பிறகே, மூலதன ஆதாயங்களுக்கான மிகைவரியை அரசு திரும்பப் பெற்றது. உள்கட்டமைப்புத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு நிதி சேவைகளை வழங்கும் ஐ.எல் அண்ட் எஃப்எஸ் (IL&FS) நெருக்கடி, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் (என்.பி.எஃப்.சி) அவல நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அவற்றின் மதிப்பைத் தாண்டி கடன் வழங்குதல், சொத்துக்களுக்கு அப்பாற்பட்ட கடன் அதிகரிப்பு ஆகியவற்றால் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.பி.ஐ) மத்திய நிதிநிலை அறிக்கை வெளியான உடனேயே இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து ரூ.24,000 கோடியை திரும்பப் பெற்றனர்

மேலும் நிதி வழங்கியதன் மூலம், அவை வர்த்தகம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது ரியல் எஸ்டேட் உள்பட பல துறைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்த அரசு, வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கான வங்கிகளின் கடன் வரம்பை, 15 இல் இருந்து 20% சதவிகிதமாக அதிகரித்தது. வேளாண்மை, நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி துறைகளுக்கு வங்கிசாரா நிதி நிறுவனங்கள் முன்னுரிமை கடன் வழங்குகின்றன.

டாலருக்கு நிகரான ரூபாய் (கோப்புப் படம்)

இந்நடவடிக்கைகள், வங்கிகளிடம் இருந்து வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் ஓட்டத்தை அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. வீட்டுவசதி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கியுள்ளது.

திட்டங்களும்... புதிய முடிவுகளும்...

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு முழுமையான மற்றும் பகுதி வீட்டு வசதி திட்டத்தை முடிக்கும் நோக்கில் ரூ.10,000 கோடியில் திட்டம் தொடங்குவதாக அரசு அறிவித்தது. ஏற்றுமதி மீதான வரி அல்லது கட்டணங்களை விலக்குவதற்கான புதிய திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தியது. ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாகவும், மாற்றாகவும், ‘ஜிஎஸ்டி’ மற்றும் 'உள்ளீட்டு வரி வரவுகளை’ செலுத்துவதற்கான தானியங்கி மின்னணு பாதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி கிரெடிட் கார்டு நிறுவனம் மூலம் அதிக காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கும் செயல்பாட்டு மூலதனத்தை வங்கிகள் அவற்றுக்கு வழங்குகின்றன.

இந்திய பொருளாதாரம் எழுச்சி பெறுவதற்கான வழிமுறைகளை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா?

ஏற்றுமதிக் கடனும் நீண்ட காலத்திற்கு முன்னுரிமைக் கடனாக கருதப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. செப்டம்பர் 20இல் மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு வியக்க வைக்கிறது. அரசிடம் இருந்து வரி நிவாரணம் பெறாத உள்நாட்டு நிறுவனங்களுக்கு, பெருநிறுவன வரி விகிதத்தை 30இல் இருந்து 22% சதவிகிதமாக குறைக்கும் அந்த முடிவு, முதலீட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு நிறுவப்பட்ட, வரும் 2023 மார்ச் 31-க்கு முன் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இனி 15% வரி மட்டுமே செலுத்த வேண்டும்.

வரிச் சலுகையும்... நெருக்கடியும்...

பெருநிறுவன வரி விகிதம் 22% சதவிகிதம் கொண்ட உள்நாட்டு நிறுவனங்கள் இறுதியில் 25.17% சதவிகிதம் மற்றும் புதிய தொழிற்சாலைகள் 17.1% சதவிகிதம் வரியை செலுத்த வேண்டும். இந்த நிறுவன வரிச்சலுகை, ஜிஎஸ்டி-க்கு பின் வந்த மிக முக்கியமான சீர்திருத்தமாகும். சர்வதேசச்சந்தையில், பெரு நிறுவன வரி குறைவாக இருந்தால் நமது தயாரிப்புகள் வெளிநாட்டு பொருட்களுடன் போட்டியிடலாம். தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவில் பெரு நிறுவன வரி 25% சதவிகிதமாகும். சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இது 17% சதவிகிதம் வரி மற்றும் பிரிட்டனில் 19% சதவிகிதம் மற்றும் தாய்லாந்தில் 20% சதவிகிதம் மட்டுமே. ஆசியாவில் பெருநிறுவன வரி சராசரி வீதம் 21.09% என்பதுடன் ஒப்பிடும்போது, சர்வதேச அளவில் இது 23.79% சதவிகிதமாகும்.

பொருளாதார வீழ்ச்சி (கோப்புப் படம்)

பெருநிறுவன வரிகளை குறைத்து தொழில்துறை வளர்ச்சிக்கு வழி வகுக்க, இந்திய அரசும் சீனாவை வலியுறுத்துகிறது. பெரு நிறுவன வரியை சர்வதேச சராசரிக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை தழுவி, 'மேக் இன் இந்தியா' என்ற தேரை இழுத்துச் செல்வது அரசின் நோக்கமாக இருக்கிறது. பெருநிறுவன வரி விலக்கின் விளைவு, நீண்ட தாமதத்தை ஏற்படுத்திவிட்டது என்பது உண்மைதான்.

பெரு நிறுவன வரி வெட்டுக்களால் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.1.45 லட்சம் கோடி வரி வருவாயை இழப்பு ஏற்பட்டாலும், அந்த பணம் தனியார் துறையிடம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் பெரும்பகுதி பணம் அறிவார்ந்த நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. மீதமுள்ள பணத்தை கொண்டு நிறுவனங்கள் பழைய கடன்களை அடைக்கவும், பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையை செலுத்தவும், தங்கள் தயாரிப்புகளின் விலையை குறைக்கவும், விற்பனையை அதிகரிக்கவும், புதிய முதலீடுகளை செய்யவுமே முடியும். பெருநிறுவன வரி வெட்டுக்களால், பொருட்களுக்கான தேவை அதிகரிக்கிறது.

இதை எதிர்கொள்ள, தயாரிப்பு மேம்பாடு தேவைப்படுகிறது. அதற்காக, முதலீட்டு வரத்துகள் மற்றும் வேலைவாய்ப்புகள் விரிவடைகின்றன. பெரு நிறுவன வரி வெட்டுக்களால் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.1.45 லட்சம் கோடி வரி வருவாயை இழப்பு ஏற்பட்டாலும், அந்த பணம் தனியார் துறையிடம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசின் வரி வருவாயை ஈடுகட்டும், பற்றாக்குறையை மாற்றும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர். அவர்களின் கணிப்புகள் நிறைவேற காலம் பிடிக்கலாம்.

நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி.!

நவம்பர் 7ஆம் தேதி, சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, இந்தியாவின் மதிப்பீட்டை ‘நிலையானது’ என்பதில் இருந்து ‘எதிர்மறை’ என குறைத்தது. இது பல இந்திய நிறுவனங்களுக்கும் குறைந்த மதிப்பீட்டை வழங்கியது. அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் சர்வதேச கடன்கள், நாடுகளில் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் நல்ல மதிப்பீடுகள் இருக்கும் போது மட்டுமே எளிதாகக் கிடைக்கும். நிலைமை உடனடியாக மேம்படவில்லை என்றால், கடன் மற்றும் மந்தநிலைக்கு இந்தியா ஆளாகக்கூடும் என்று மூடிஸ் கணித்துள்ளது.

அத்தகைய பேரழிவை தவிர்க்க, விரைவான முறையான சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும் மற்றும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக அதன் நற்பெயரை மீட்டெடுக்க வேண்டும்!

Intro:Body:

பொருளாதார மறுமலர்ச்சிக்கு வலுவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்

--

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) வளர்ச்சி விகிதம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. உள்கட்டமைப்பு தொழில்கள் உட்பட 8 பெரிய தொழில்துறை அலகுகளின் முன்னேற்றம் சரிந்துள்ளது. இவை, நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது தவிர, சர்வதேச  நிலவரமும் பீதி அடையச் செய்கிறது. அமெரிக்க - சீனா வர்த்தகப்போர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் குறைத்து வருகிறது. நிலைமையை உடனடியாக சரிசெய்யாவிட்டால் ஒட்டுமொத்த அமைப்பும் மேலும் மந்தகதிக்கு சென்றுவிடும் என்று சர்வதேச மதிப்பீட்டு முகமை எச்சரித்துள்ளது. 

நடப்பு நிதியாண்டில் (2019-20) ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை,  கடந்த 6 ஆண்டுகளில் இல்லாதவகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 4.5% ஆக குறைந்துள்ளது. இந்த விகிதம் 2018-19 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 7.1% ஆக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 4.8%; இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 7.5% ஆக இருந்தது. அக்டோபர் மாதத்தில் 8 பெரிய உள்கட்டமைப்பு தொழில்களில், உற்பத்தி 5.8% குறைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி, நுகர்வோர் தேவை, தனியார் முதலீடு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் சரிவு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு இதைவிட இன்னும் என்ன ஆதாரங்கள் நமக்கு தேவை?

உலகளாவிய குறைந்து வரும் தேவை மற்றும் அமெரிக்க - சீனா வர்த்தகப்போர் ஆகியன, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சரிவை நோக்கி தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தருணத்தில், அரசின் வருவாய் மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிவசூல் பற்றாக்குறை, ரூ. 2.7 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தை புதுப்பிக்கும் முயற்சியாக, பல்வேறு திட்டங்களுக்கான செலவினங்களை அரசு அதிகரித்துள்ளது. இது, நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.  வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (யுஎன்சிடிஏடி), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2019-20 ஆம் ஆண்டில் 6% ஆகக் குறைந்துவிடும் என்று கணித்துள்ளது; இது, 2018இல் 7.4% ஆக இருந்தது.

உலக வங்கியும், வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகளை 7.5% என்பதில் இருந்து 6% ஆக குறைத்தது. சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் - மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, இதுவரை இல்லாத ஒன்றாக 5.8% என இந்தியாவிற்கான மதிப்பீட்டை குறைத்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) 7.1% என்பதில் இருந்து 6.1% ஆக குறைத்தது. உள்நாட்டு சேவைகளுக்கான தேவை குறைவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதப்படுகிறது. தொழில்துறை உற்பத்தி குறைவு,  வேலையின்மை, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பிற துறைகளில் விற்பனை குறைந்து வருவது, மற்றும் அமெரிக்க - சீனா வர்த்தக போட்டியால் நமது ஏற்றுமதியில் மந்தம் ஆகியன, சர்வதேச பொருளாதாரச் சந்தையில் இந்தியாவை முன்னேறாமல் தடுக்கின்றன. பொருளாதார மந்தநிலையை சமாளிக்க, கடந்த 3 -  4 மாதங்களில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  பல்வேறு துறைகளில் வளர்ச்சியை மேம்படுத்த 32 முடிவுகளை அரசு அறிவித்தது.

வரும் 2024-25 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்ற, மத்திய அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) முதன்முறையாக, ரெப்போ வட்டி விகிதத்தை 2019ஆம் ஆண்டில் ஐந்து முறை குறைத்தது. விளிம்பு நிலை வசதி, விகிதத்தையும் வங்கி வீதத்தையும் 5.40% ஆக குறைத்தது. வணிக வங்கிகளுக்கு தேவைப்படும்போது, ரிசர்வ் வங்கி இந்த விகிதங்களுக்கு நிதியளிக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறைவாக கடன் பெறவும், தனிநபர்களுக்கும், பிற  நிறுவனங்களுக்கும் கடன் வழங்கவும் உதவும். இக்கடன்கள் தேவை, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். ரிசர்வ் வங்கி பல ஆண்டுகளாக வட்டி விகிதங்களைக் குறைத்து வந்தபோதும், வங்கிகள் அந்த பலனை நுகர்வோருக்கு தரவில்லை. இம்முறை, குறைந்த வட்டி விகிதத்தில் சில்லறை கடன்களை வழங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இது வீட்டுக்கடன், ஆட்டோமொபைல் மற்றும் பிற சில்லறை கடன்களுக்கான மாத தவணைத்தொகை (இஎம்ஐ) அளவை குறைக்கும் மற்றும் தேவையை மேலும் அதிகரிக்கும். தேவையை சமாளிக்க முதலீடுகள் அவசியமாகிறது. 

சூழ்நிலைகளை பொருத்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று அரசு நம்புகிறது. இந்திய வர்த்தக மற்றும் பொருளாதாரச் சந்தையில் இந்திய வாகனத் தொழில், சுமார் 49%-ஐ கொண்டுள்ளது. இத்தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறத்தாழ 3.7 கோடி மக்களுக்கு வேலையை தருகிறது. வாகனத்துறையானது எஃகு, அலுமினியம் மற்றும் டயர் தொழில்களுடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது. வாகனங்களுக்கான தேவை குறைந்துவிட்டால், மேற்கண்ட தொழில்களும் பாதிக்கப்படும். கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 2019 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் பயணிகள் வாகன விற்பனை சுமார் 18.42% குறைந்துள்ளது. அனைத்து வகை வாகனங்களின் விற்பனை 12.35% சரிந்தது. இது பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. வாகனத் தொழிலில் நிலவும் சிக்கலுக்கு தீர்வு காணும்  நடவடிக்கைகளை, ஆகஸ்ட் 23இல் அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, புதிய வாகனங்கள் வாங்குவதற்கான தடையை அரசு துறைகள் நீக்கியுள்ளன. ஆகஸ்ட் 30இல், பத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து, நான்கு பெரிய வங்கிகளாக அரசு மாற்றியது. இந்த இணைப்பு, வங்கிகளின் நிதி கிடைப்பதை அதிகரிக்கும் மற்றும் அதிக கடன் வழங்க வழிவகுக்கும். பொதுமக்களுக்கு எளிதில் கடன் வழங்க ஏதுவாக, மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.70,000 கோடியை வழங்கும். ஆண்டு வருமானம் ரூ. 2 கோடி முதல் ரூ.5 கோடி வரையுள்ள, ஆர்வம் கொண்ட தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு, மிகைவரியை (சர்சார்ஜ்)  ஆண்டுக்கு 15% என்பதை 25% ஆக உயர்த்தியது. 5 கோடி அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ள தொழில்முனைவோர் 37% மிகை வரியை தவறாமல் செலுத்த வேண்டும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.பி.ஐ) பட்ஜெட் வெளியான உடனேயே இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து ரூ.24,000 கோடியை திரும்பப் பெற்றனர். அதன் பிறகே, மூலதன ஆதாயங்களுக்கான மிகைவரியை அரசு திரும்பப் பெற்றது. உள்கட்டமைப்புத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு நிதி சேவைகளை வழங்கும் ஐ.எல் அண்ட் எஃப்எஸ் (IL&FS) நெருக்கடி, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் (என்.பி.எஃப்.சி) அவல நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அவற்றின் மதிப்பைத் தாண்டி கடன் வழங்குதல் மற்றும் சொத்துக்களுக்கு அப்பாற்பட்ட கடன் அதிகரிப்பால், சிக்கலை எதிர்கொண்டுள்ளன. மேலும் மேலும் நிதி வழங்கியதன் மூலம், அவை வர்த்தகம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது ரியல் எஸ்டேட் உட்பட பல துறைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்த அரசு, வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கான  வங்கிகளின் கடன் வரம்பை, 15 இல் இருந்து 20% ஆக அதிகரித்தது. வேளாண்மை, நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி  துறைகளுக்கு வங்கிசாரா நிதி நிறுவனங்கள் முன்னுரிமை கடன் வழங்குகின்றன. இந்நடவடிக்கைகள், வங்கிகளிடம் இருந்து வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் ஓட்டத்தை அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. வீட்டுவசதி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கியுள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு முழுமையான மற்றும் பகுதி வீட்டு வசதி திட்டத்தை முடிக்கும் நோக்கில் ரூ.10,000 கோடியில் திட்டம் தொடங்குவதாக அரசு அறிவித்தது. ஏற்றுமதி மீதான வரி அல்லது கட்டணங்களை விலக்குவதற்கான புதிய திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தியது. ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாகவும், மாற்றாகவும், ‘ஜிஎஸ்டி’ மற்றும் 'உள்ளீட்டு வரி வரவுகளை’ செலுத்துவதற்கான தானியங்கி மின்னணு பாதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி கிரெடிட் கார்டு நிறுவனம் மூலம் அதிக காப்பீட்டு பாதுகாப்பை வழங்கும் செயல்பாட்டு மூலதனத்தை வங்கிகள் அவற்றுக்கு வழங்குகின்றன. ஏற்றுமதிக் கடனும் நீண்ட காலத்திற்கு முன்னுரிமைக் கடனாக கருதப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. செப்டம்பர் 20இல் மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு வியக்க வைக்கிறது. அரசிடம் இருந்து வரி நிவாரணம் பெறாத உள்நாட்டு நிறுவனங்களுக்கு, பெருநிறுவன வரி விகிதத்தை 30இல் இருந்து 22% ஆக குறைக்கும் அந்த முடிவு, முதலீட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு நிறுவப்பட்ட, வரும் 2023 மார்ச் 31-க்கு முன் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இனி 15% வரி மட்டுமே செலுத்த வேண்டும்.

கார்ப்பரேட் வரி விகிதம் 22% கொண்ட உள்நாட்டு நிறுவனங்கள் இறுதியில் 25.17% மற்றும் புதிய தொழிற்சாலைகள் 17.1% வரியை செலுத்த வேண்டும். இந்த நிறுவன வரிச்சலுகை,  ஜிஎஸ்டி-க்கு பின்  வந்த மிக முக்கியமான சீர்திருத்தமாகும். சர்வதேசச்சந்தையில், கார்ப்பரேட் வரி குறைவாக இருந்தால் நமது தயாரிப்புகள் வெளிநாட்டு பொருட்களுடன் போட்டியிடலாம். தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவில் கார்ப்பரேட் வரி 25% ஆகும். சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இது 17% வரி மற்றும் பிரிட்டனில் 19% மற்றும் தாய்லாந்தில் 20% மட்டுமே. ஆசியாவில் கார்ப்பரேட் வரி சராசரி வீதம் 21.09% என்பதுடன் ஒப்பிடும்போது, சர்வதேச அளவில் இது 23.79% ஆகும். 

கார்ப்பரேட் வரிகளை குறைத்து தொழில்துறை வளர்ச்சிக்கு வழி வகுக்க,  இந்திய அரசும் சீனாவை வலியுறுத்துகிறது. கார்ப்பரேட் வரியை சர்வதேச சராசரிக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை தழுவி, 'மேக் இன் இந்தியா' என்ற தேரை இழுத்துச் செல்வது அரசின் நோக்கமாக இருக்கிறது. கார்ப்பரேட் வரி விலக்கின் விளைவு, நீண்ட தாமதத்தை ஏற்படுத்திவிட்டது  என்பது உண்மைதான். ஆனால் பெரும்பகுதி பணம் அறிவார்ந்த நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. மீதமுள்ள பணத்தை கொண்டு நிறுவனங்கள் பழைய கடன்களை அடைக்கவும், பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையை செலுத்தவும், தங்கள் தயாரிப்புகளின் விலையை குறைக்கவும், விற்பனையை அதிகரிக்கவும், புதிய முதலீடுகளை செய்யவுமே முடியும். கார்ப்பரேட் வரி வெட்டுக்களால், பொருட்களுக்கான தேவை அதிகரிக்கிறது.

இதை எதிர்கொள்ள, தயாரிப்பு மேம்பாடு தேவைப்படுகிறது. அதற்காக, முதலீட்டு வரத்துகள் மற்றும் வேலைவாய்ப்புகள் விரிவடைகின்றன. கார்ப்பரேட் வரி வெட்டுக்களால் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.1.45 லட்சம் கோடி வரி வருவாயை இழப்பு ஏற்பட்டாலும், அந்த பணம் தனியார் துறையிடம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசின் வரி வருவாயை ஈடுகட்டும், பற்றாக்குறையை மாற்றும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர். அவர்களின் கணிப்புகள் நிறைவேற காலம் பிடிக்கலாம். நவம்பர் 7 ஆம் தேதி, சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, இந்தியாவின் மதிப்பீட்டை ‘நிலையானது’ என்பதில் இருந்து ‘எதிர்மறை’ என குறைத்தது. இது பல இந்திய நிறுவனங்களுக்கும் குறைந்த மதிப்பீட்டை வழங்கியது. அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் சர்வதேச கடன்கள்,  நாடுகளில் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் நல்ல மதிப்பீடுகள் இருக்கும் போது மட்டுமே எளிதாகக் கிடைக்கும். நிலைமை உடனடியாக மேம்படவில்லை என்றால், கடன் மற்றும் மந்தநிலைக்கு இந்தியா ஆளாகக்கூடும் என்று மூடிஸ் கணித்துள்ளது. அத்தகைய பேரழிவை தவிர்க்க, விரைவான முறையான சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும் மற்றும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக அதன் நற்பெயரை மீட்டெடுக்க வேண்டும்!

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.