ETV Bharat / business

பயனர் தொழில்நுட்ப சாதனங்களின் சக்கரவர்த்தியான ‘சாம்சங்’ நிறுவனர் மரணம்!

author img

By

Published : Oct 25, 2020, 5:37 PM IST

Updated : Oct 25, 2020, 8:15 PM IST

சர்வேதச அளவில் கைபேசிகள், தொலைக்காட்சிகள், வீட்டு உபயோக பொருள்களின் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ இன்று (அக்டோபர் 25) காலமானார். அவருக்கு வயது 78.

samsung
samsung

சியோல் (கொரியா): சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ இன்று காலமானார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை.

தென் கொரியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் புகழ் பெற்று விளங்கும் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ இன்று காலமானதாக அந்நிறுவனம் அறிவித்தது.

samsung
மறைந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ

லீ குன் ஹீவின் தலைமையின் கீழ், இயங்கிய சாம்சங், பயனர்களில் தேவைகளை கருத்தில்கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன், பல சாதங்களை சந்தைப்படுத்தியது. வீட்டு உபயோக பொருள்கள், கைபேசிகள் என அனைத்து ஆடம்பர பொருள்களையும் மக்களின் தேவைகளுக்காக சந்தையில் நிலைநிறுத்தியது. இதுவே நிறுவனத்தை தென் கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கிற்கு சமமாக வளர துணைநின்றது.

சாம்சங் நிறுவனத்தின் நிறுவனரான லீ பைங்-சுல் இறப்புக்குப் பிறகு அவரது மூன்றாவது மகனான லீ குன் ஹீ 1987ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இவரது தலைமைக்கு பின்னர் சாம்சங் தொழில்நுட்பம், உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தது. 1990-களில் சாம்சங் நிறுவனம் உருவாக்கிய மெமரி சிப் ஜப்பான், அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை சக்கைபோடு போட்டது. 2000ஆம் ஆண்டுக்குப் பின் கைபேசி உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக வளர தொடங்கியது.

samsung
சாம்சங் நிறுவனத்தின் நிறுவனர் லீ பைங்-சுல்

தென்கொரியாவில் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களில் சாம்சங் மிகப் பெரியது. யுத்தத்தால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து, உலகின் 12ஆவது மிகப் பெரிய பொருளாதாரத்திற்கு தென்கொரியாவை உயர்த்தியதில் சாம்சங் முக்கிய பங்கு வகிக்கிறது.

திரைமறைவு அரசியல் உறவுகள் மற்றும் போட்டியாளர்களை வளரவிடாமல் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டுகள் சாம்சங் தலைவர் லீ மீதுள்ளது. 1996ஆம் ஆண்டு தென்கொரியா நாட்டின் அதிபருக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றமும் உறுதி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

samsung
சாம்சங் ஸ்மார்ட் அங்காடிகள்

ஒரு தனித்துவமான வாழ்க்கை முறைக்கு ஏற்ற நபராக அறியப்பட்ட லீ குன் ஹீ, 2014ஆம் ஆண்டு மாரடைப்பால் படுக்கையில் கிடந்தார். இந்நிலையில் சாம்சங் நிறுவனம், லீ குன் ஹீ இன்று (அக்.25) காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Oct 25, 2020, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.