ETV Bharat / business

ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் உயர்வு - ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5i, ரியல்மி 6 ஆகிய ஸ்மாட்ர்போன்களின் விலை ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Realme smartphone price hike
Realme smartphone price hike
author img

By

Published : Jun 30, 2020, 4:51 PM IST

ரியல்மி நிறுவனம் ரியல்மி 5i என்ற ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டது. 6.52 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 655 பிராசஸர், நான்கு கேமராக்கள் என்று அட்டகாசமான வசதிகளுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போன், ரியல்மி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம், ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியது. இதன் காரணமாக, 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஊரடங்கால் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் உள்ளிட்டவற்றால் இந்த ஸ்மார்ட்போனின் விலை மேலும் 1000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 8,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது 10,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்ட்டின் விலையும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு 11,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி 5i சிறப்புகள்

  • 6.52 இன்ச் டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 655 பிராசஸர்
  • பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 8 மெகாபிக்சல் கேமரா
  • 5000mah பேட்டரி

அதேபோல, கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் விலையும் இரண்டாவது முறையாக 1000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 12,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது, 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடல் தற்போது 16,999 ரூபாய்க்கும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடல் தற்போது 17,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 6 சிறப்புகள்

  • 6.5 இண்ச் டிஸ்ப்ளே
  • 90 Hz Refresh rate
  • மீடியாடெக் ஹேலியோ G90T பிராசஸர்
  • 64 மெகாபிக்சல் சாம்சங் GW சென்சார் + 8 மெகாபிக்சல் அல்டிரா வைட் ஆங்கிள் கேமரா+2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகபிக்சல் கேமரா
  • 16 மெகாபிக்சல் முன்புற கேமரா
  • 4,300mah பேட்டரி
  • 30W ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
  • பாதுகாப்பிற்கு கொரில்லா க்ளாஸ் 3

இதையும் படிங்க: 60 மடங்கு ஜூம் செய்யும் வசதியுடன் வெளியான ரியல்மி X3 SuperZoom

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.