சீன நிறுவனமான ’ரியல் மீ’ செல்ஃபோன் துறையில் தனது அடுத்த படைப்பான ’ரியல் மீ 5’-ஐ நாளை வெளியிடுகிறது. இந்த கைப்பேசியானது மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்திலும், ரியல் மீ இணையதளத்திலும் விற்பனைக்கு வருகிறது.
ரியல் மீ 5 செல்போனின் முக்கிய அம்சங்கள்
- 6.5 இன்ச் HD டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+
- புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC அறிமுகம்
- ஆண்ட்ராய்டு 6.0
- நான்கு பின்புற கேமராக்கள் 12எம்பி, 8 எம்பி, 2எம்பி மைக்ரோ லென்ஸ், 2எம்பி லென்ஸ்
- 13எம்.பி செல்பி கேமரா
- 5000mah பேட்டரி
ரியல் மீ 5 செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்யேகமாக ஜியோ வழங்கும் ரூ. 7000 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.ரியல் மீ 5 செல்போன் 3ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 9,999யும், 4ஜிபி ரேமின் விலை ரூ. 11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.