விண்வெளி பாதுகாப்பிற்காக நாசாவுடன் கைகோர்க்கும் ஸ்பேஸ்எக்ஸ்! - NASA Administrator Steve Jurczyk
வாஷிங்டன்: விண்வெளி பாதுகாப்பை மேம்படுத்த நாசாவுடன், எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளைத் தயாரிக்கும் எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், நாசாவுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இடையில் செயற்கைக்கோள்கள், ராக்கெட் ஏவுதலில் உள்ள குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சியாகும். அதே போல், ரைட்ஷேர் திட்டங்களும் வழிவகுக்கிறது.
இது குறித்து நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜுர்சிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தகவல் தொடர்புகள், லோகேஷன், வானிலை நிலவரங்கள் உள்ளிட்ட பல செயற்கைக்கோள்களை நம்பிதான், பெரும்பாலான மக்கள் உள்ளனர். அதே சமயம், பல்வேறு செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக ஏவப்படுவதால், விண்வெளியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கு, தகவல்தொடர்புகளை அதிகரிப்பது, தரவைப் பரிமாறிக்கொள்வது, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியமாகும்" எனத் தெரிவித்தார்.
விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் இரு நிறுவனங்களுக்கும், மற்ற செயறக்கோள்களின் இருப்பிடம் தெளிவாகத் தெரியும் பட்சத்தில், தேவையற்ற விபத்துகளையும், சிக்கல்களையும் தீர்த்திட முடியும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏர்போர்ட் தனியார் மயமாக்கல் ஊக்கமளிக்கும் நல்ல முடிவா நிபுணர்கள் கருத்து