உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பலர் வேலை வாய்ப்புகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். பல துறைகள் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம், பெருந்தொற்று கால ஊக்கத் தொகையாக ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்(1500 அமெரிக்க டாலர்கள்) என்று அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட்டில் சுமார் 1,75,508 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஊக்கத் தொகையை வழங்க சுமார் 200 மில்லியன் டாலர்கள் தேவைப்படும். இது மைக்ரோசாப்ட்டின் 2 நாள் மொத்த வருமானத்தை விட குறைவாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய 45 ஆயிரம் ஊழியர்களுக்குத் தலா 1000 டாலர்கள் பணத்தை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.