லெனோவின் நிறுவனம் கைப்பேசி துறையில் சமீப காலங்களாக விற்பனையில் சிறியதாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. பயனாளர்கள் மத்தியிலும் லெனோவா செல்போன்கள் வரவேற்பு மந்தமாகவே காணப்பட்டு வருகிறது. அதைச் சரிசெய்யும் விதமாக ஸ்மார்ட் வாட்ச் துறையில் புதிய வாட்ச் ஒன்றை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, லெனோவா கார்மீ வாட்ச் பிளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. அதன் விலையாக ரூ. 3,499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லெனோவா கார்மீ வாட்ச் முக்கிய அம்சங்கள்:
- 1.3 இ்ன்ச் ஐபிஎஸ் கலர்ஃபுல் டிஸ்பிளே (IPS Colourful display)
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டென்ட்(water and Dust resistant)
- ப்ளூடூத் வெர்ஷன் 4.2
- கருப்பு,பச்சை என இரண்டு நிற மாடல்களில் கிடைக்கும்
- 24 மணி நேரமும் இதயத் துடிப்பு, தூக்க நேரத்தையும் கண்காணிக்கும் வசதி
- ஸ்கிப்பிங், பேட்மிண்டன், கூடைப்பந்து, கால்பந்து, நீச்சல், நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் என எட்டு வகையான பிரத்யேக மோட் வசதிகள்
- வானிலை நிலவரம், மொபைல் நம்பர்ஸ்,மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், செல்போன் அழைப்புகள், சமூக வலைத்தளங்கள் புதிய அறிவிப்புகள் போன்றவற்றை ஸ்மார்ட் வாட்சியில் பார்த்துக்கொள்ளும் வசதி
இந்த லெனோவா ஸ்மார்ட் வாட்சை ஆண்ட்ராய்டு,ஐஒஎஸ்(iOS) தளத்திலும் உபயோகித்துக் கொள்ளலாம்.