ETV Bharat / business

மக்கள் ஊரடங்கு - 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து!

author img

By

Published : Mar 21, 2020, 10:21 PM IST

டெல்லி: நாளை நாடு முழுவதும் ஒருநாள் மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3,700 தொடர்வண்டிகள், 1,000 விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

janta curfew updates, மக்கள் ஊரடங்கு செய்தி
மக்கள் ஊரடங்கு செய்தி

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொதுஇடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்குப் பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் சுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்றக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் வகையில், நாளை (மார்ச் 22 ஆம் தேதி) நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ பிறப்பிக்கப்படுவதாகவும், மக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமரின் அழைப்பை ஏற்று, டெல்லி மெட்ரோ சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இன்று முதல் திங்கள் வரை அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து டெல்லி சந்தைகளை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், மருந்துகள், பால், மளிகைக் கடைகள் மூடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

200 மி.லி. சானிடைசருக்கு அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.100 நிர்ணயம்!

மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரை திட்டமிடப்பட்ட 2019 யூபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான மீதமுள்ள நேர்காணல்களை மத்திய பொது சேவை ஆணையம் ஒத்திவைத்தது. நேர்முகத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய், சுவாசப் பிரச்னைகள், நாள்பட்ட வியாதிகள் கொண்ட அலுவலர்களுக்கு, அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை மருத்துவச் சான்றிதழின்றி பணிவிடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் 3,700 தொடர்வண்டிகள், டெல்லி மெட்ரோ ரயில் சேவை, 1000 விமானங்கள் ரத்து செய்யப்படும். டெல்லி உட்பட பல நகரங்களில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரிய உணவகங்களும் மூடப்படும்.

இந்திய ரயில்வே அறிவிப்பின்படி, நாளை நாடு முழுவதும் தினமும் 2,400 பயணிகள் ரயில்கள் மற்றும் 1,300 மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, அவர்களின் பணம் அனைத்தும் பயணிகளுக்குத் திருப்பித் தரப்படும். இந்தியாவில் சர்வதேச விமானங்களை தரையிறக்குவது மார்ச் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

முகக்கவசம், வென்ட்டிலேட்டர்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

இதற்கிடையில், இண்டிகோ, கோ ஏர் ஆகிய இரண்டு உள்நாட்டு விமான நிறுவனங்களும் மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கோ ஏர் நிறுவனம் தனது உள்நாட்டு விமானங்கள் அனைத்தையும் நாளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

இண்டிகோ 60 விழுக்காடு விமானங்களை மட்டுமே இயக்குவதாகக் கூறியுள்ளது. இரு நிறுவனங்களின் முடிவால் நாளை ஆயிரம் விமானங்களின் சேவை ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.