இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், தங்களின் விமானச் சேவைகளை வியட்நாம், துருக்கி, சீனா ஆகிய நாடுகளுக்கு விரிவுபடுத்தியதன் விளைவாக, சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகமான ஐஏடிஏ-வில் உறுப்பினராக இடம்பிடித்துள்ளது.
மேலும், ஐரோப்பாவைச் சேர்ந்த மிகப் பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி 300 புதிய விமானங்களை இண்டிகோ நிறுவனம் வாங்குகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.2லட்சத்து 34ஆயிரத்து 206.77 கோடியாகும்.
பாமாயில் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கவில்லை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ஒரு விமான நிறுவனத்திடமிருந்து ஏர் பஸ்ஸுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆர்டர் இதுதான். A320neo, A321neo, A321XLR ஆகிய ரகத்திலான விமானங்கள் தயாரித்துத்தர கோரப்பட்டுள்ளது. புதிய விமானங்கள் மூலம் தனது சந்தைப் பங்கை உயர்த்தும் முனைப்பில் இண்டிகோ இருக்கிறது. தற்போது இண்டிகோவின் சந்தைப் பங்கு 47 விழுக்காடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.