கைப்பேசி துறையில் சியோமி, ரியல்மி உள்ளிட்ட சீன செல்போன் நிறுவனங்கள் தங்களுக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளன. தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதைக் கூறும் வகையில் புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றனர். அந்த வகையில், சீன செல்போன் நிறுவனமான ஹவாய், அடுத்த படைப்பான ஹவாய் Y9s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஹவாய் Y9s சிறப்பு அம்சங்கள்:
- 6.59 இன்ச் அல்ட்ரா ஃபுல்வியூ டிஸ்பிளே (Ultra FullView Display)
- கிரின் 710 எஃப் ஆக்டா கோர் சிப்செட் Kirin 710F octa-core chipset
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி ஸ்டோரேஜ்
- 48 எம்பி, 8 எம்பி, 2 எம்பி என மூன்று பின்புற கேமராக்கள்
- 16 எம்பி பாப்அப் செல்ஃபி கேமரா
- 4000 எம்ஏஎச் பேட்டரி
இதன் விற்பனை விலை ரூ. 19 ஆயிரத்து 990ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் வருகிற மே 19ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பது மாத விலை இல்லாத இஎம்ஐ வசதியும், ஆயிரம் ரூபாய் கேஷ்பேக்கும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாதுகாப்பு உபகரணங்களுக்காக அமேசானில் வந்த 'கோவிட்-19 சப்ளை ஸ்டோர்'