அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் உலகளவில் க்ரூஸர் பைக் செக்மண்டில் தனக்கென்று தனி அடையாளம் பதித்துள்ளது. இந்நிலையில் ஹார்லி டேவிட்சன் அடுத்த படைப்பாக BS-VI எமிஷன் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலையாக ரூ. 5.74 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.BS-VI எமிஷன் பைக்கில் 750 சிசி லிகுவிட் கூலிங் வசதியும், ஆன்டி லாக்கிங் வசதியான "எபிஸ்" பொருத்தப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் பைக் விற்பனை தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதைக் கொண்டாடும்விதமாக ’ஸ்ட்ரீட் 750’ பைக்கில் சில மாற்றங்களை செய்து லிமிடெட் வெர்ஷனில் 300 பைக்குகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன.
இது குறித்து ஹார்லி டேவிட்சன் நிறுவனர் கூறுகையில், ’ஹார்லி டேவிட்சன் பைக்குகள் பிரீமியம் பிரிவு ரைடர்ஸ்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் வர்த்தகம் செய்த பத்து வருட காலங்களில், 24,000 ஹார்லி டேவிட்சன் பைக்குக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் 11 பைக் மாதிரிகள் ஹரியானாவில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.