ETV Bharat / business

20 உங்களுக்கு; 80 ஓட்டுநருக்கு - வாடகை கார் நிறுவன நெறிமுறைகள்! - உபர்

வாடகை கார்களை இயக்கும் நிறுவனங்கள் சவாரி கட்டணம், ஓட்டுநர்களுக்கான ஊதிய தொகை உள்ளிட்டவற்றை பெரும்பாலும் தாங்களே முடிவு செய்துவந்தன. இச்சூழலில் அதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாடகை கார் நெறிமுறைகள்
வாடகை கார் நெறிமுறைகள்
author img

By

Published : Nov 28, 2020, 2:22 PM IST

டெல்லி: வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபர் போன்ற நிறுவனங்களை முறைப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வாடகை கார்களை இயக்கம் நிறுவனங்கள் சவாரி கட்டணம், ஓட்டுநர்களுக்கான ஊதிய தொகை உள்ளிட்டவற்றை பெரும்பாலும் தாங்களே முடிவு செய்துவந்தன. இவற்றை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இச்சூழலில், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மோட்டார் வாகன நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று (நவ.27) வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 3 கி.மீ கட்டணத்தை அடிப்படை கட்டணமாக நிறுவனங்கள் வசூலித்துக்கொள்ளலாம். இதுதவிர, அதிக சவாரிகள் உள்ள நேரத்தில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை 1.5 மடங்கு வரை உயர்த்திக்கொள்ளலாம்.

சவாரிகள் குறைவான பிற நேரங்களில் அடிப்படை கட்டணத்திலிருந்து 50 விழுக்காடு வரை இந்த கட்டணங்களைக் குறைத்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்நிறுவனங்கள் அதிகபட்சமாக 20 விழுக்காடு தரகு தொகையை மட்டுமே எடுத்துக்கொண்டு, மீதமுள்ள 80 விழுக்காடு தொகையை ஓட்டுநருக்கு வழங்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், பெருநிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கான வசதிகள், விழிப்புணர்வு திட்டங்களுக்காக மாநில அரசு 2 விழுக்காடு தொகையை வசூலித்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, இதுபோன்ற நிறுவனங்களில் ஓட்டுநராக இணைவதற்கு, சரியான அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை ஓட்டுநர் வைத்திருக்க வேண்டும்.

கூடுதலாக, ஓட்டுநருக்குக் குறைந்தபட்சம் இரண்டு வருட ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும். அவ்வாறு அனுபவம் இல்லாத ஓட்டுநரை பணிக்குச் சேர்ப்பதானால், அவர்களுக்கு அந்நிறுவனம், 15 நாள்கள் பயிற்சி கொடுக்க வேண்டும். அதன்பின்னர், ஓட்டுநர் மீதான வரலாறு, காவல் துறை சரிபார்ப்பு ஆகியவை செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கார் ஓட்டுநர் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லையென்றால் அந்நிறுவனங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் செல்வதுடன், அவர்கள் உடனடியாக ஓட்டுநரைத் தொடர்புகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, சக பயணிகளுடன் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும் (ஷேர் டாக்ஸி) முறையில், பெண் ஒருவர் பயணிக்க வேண்டுமானால், அவர் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வாகனத்தில் மட்டுமே பயணிக்க முடியும். மேலும், அவ்வாறு ஷேர் டாக்ஸியில் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்திலிருந்து 10 விழுக்காட்டை வசூலிக்க ஓட்டுநர்களுக்கு உரிமை உண்டு என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.