உலகை மிரட்டும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறிவருகின்றன. இந்த வைரசிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மக்கள் கைகளை ஒழுங்காகக் கழுவ வேண்டும் எனவும், வீட்டைவிட்டு வெளியே சென்றால் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் சில நேரங்களை வேறு வேலைகள் காரணமாக தங்களைச் சுத்தமாக வைக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றனர். அதைச் சரிசெய்யும் நோக்கத்திலேயே கூகுள் நிறுவனம் இத்தகையே முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் உபயோகிக்கு மக்களுக்காகப் புதிய அப்டேட் வெர்ஷன் 5.4-ஐ வெளியிட்டுள்ளது. அதில், மக்களுக்கு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கைகளை 40 நொடிகள் கழுவ வேண்டும் என்று நினைவூட்டும் தகவல் தெரிவிக்கும் அம்சம் இடம்பெற்றுள்ளது. அப்போது, பயனாளர் ஏற்கனவே கைகளைக் கழுவிவிட்டால், கைக்கடிகாரத் திரையில் காட்டும் "நிறுத்தம்" என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
இதற்கு முன்னதாக, சாம்சங் நிறுவனம் இத்தகையை கைகழுவும் நினைவூட்டல் வசதியை ஸ்மார்ட் வாட்சில் உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹேண்ட் வாஷ் செய்ய உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா! - அப்போ இந்த வாட்ச கட்டிக்கோங்க!