ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், தங்களது நேரத்தை ஆன்லைன் செயலிகளில் செலவிட்டு வருகின்றனர். ஜூம் செயலியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, மக்கள் அனைவரும் கூகுள் மீட் செயலி பக்கம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், கூகுள் மீட் செயலி அனைவருக்கும் இலவசம் என்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து ஜி சூட் துணைத் தலைவர் ஜேவியர் சொல்டெரோ தனது ட்விட்டர் பக்கத்தில், "கூகுளின் வீடியோ கான்ஃபெரன்சிங் மீட் செயலி முற்றிலும் இலவசமாகியுள்ளது. இதை meet.google.com என்ற இணையதளத்தில் மின்னஞ்சல் முகவரி மூலம் அணுகலாம் அல்லது ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் தளத்தில் உபயோகிக்கலாம்.
-
The way we work, live, & get together has changed so much, we made premium video meetings with #GoogleMeet free for everyone. Head to https://t.co/DDSvWFxDG8 or find it in @Gmail for your 💼 meetings, 🎂 meetings, 🩺 meetings, 📖 meetings or 🧘meetings → https://t.co/Rt2ZAVqfAk pic.twitter.com/xmtbV9UPIB
— Google (@Google) May 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The way we work, live, & get together has changed so much, we made premium video meetings with #GoogleMeet free for everyone. Head to https://t.co/DDSvWFxDG8 or find it in @Gmail for your 💼 meetings, 🎂 meetings, 🩺 meetings, 📖 meetings or 🧘meetings → https://t.co/Rt2ZAVqfAk pic.twitter.com/xmtbV9UPIB
— Google (@Google) May 12, 2020The way we work, live, & get together has changed so much, we made premium video meetings with #GoogleMeet free for everyone. Head to https://t.co/DDSvWFxDG8 or find it in @Gmail for your 💼 meetings, 🎂 meetings, 🩺 meetings, 📖 meetings or 🧘meetings → https://t.co/Rt2ZAVqfAk pic.twitter.com/xmtbV9UPIB
— Google (@Google) May 12, 2020
இந்த வசதியை மக்கள் விரைவில், தங்களது ஜிமெயில் கணக்கில் நேரடியாக உபயோகிக்கும் வகையில் தயாரித்து வருகிறோம். கடந்த மாதம், தினந்தோறும் சுமார் 3 மில்லியன் புதிய பயனாளர்கள் சேர்ந்தனர். இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள மக்கள் இடையே மீட் செயலி சென்றடைய விரிவுபடுத்துகிறோம்" எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பாப்-அப் செல்பியுடன் அறிமுகமான ஹவாய் Y9s ஸ்மார்ட்போன்!