கரோனா காலகட்டத்தில் ஆன்னைல் ஷாப்பிங் அசுர வளர்ச்சியைக் கண்டது. பலரும் வெளியே செல்வதைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் இருந்தபடியே பொருள்களை வாங்கிவருகின்றனர். அந்த வரிசையில், ஃபிளிப்கார்ட்டின் இ-காமர்ஸ் வலைதளம் மூலம் மளிகைப் பொருள்களையும் மக்கள் வாங்கத் தொடங்கினர்.
ஏனென்றால், அதிகப்படியான சலுகைகளை ஃபிளிப்கார்ட் வழங்கிவருகிறது. ஒரு மாதத்திற்கான மொத்த மளிகைப் பொருள்களை ஃபிளிப்கார்ட்டில் வாங்கினால், வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் லாபம்தான், பணத்தைச் சேமிக்க முடியும். எதிர்பார்த்ததைவிட மளிகைப் பொருள்கள் அதிகளவில் விற்பனையாகி, தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது வரை, கொல்கத்தா, புனே, அகமதாபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், மைசூரு என மொத்தமாக 50 நகரங்களில் ஃபிளிப்கார்ட்டின் இ-காமர்ஸ் சேவை உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் கூடுதலாக 70 நகரங்களில் மளிகைப் பொருள்கள் டெலிவரி சேவையைக் கொண்டுவர ஃபிளிப்கார்ட் முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, பெங்களூருவில் 90 நிமிடத்தில் ஆர்டர் செய்த பொருள்களை டெலிவரி செய்யும் ஃபிளிப்கார்ட்டின் ஹைப்பர்லோகல் திட்டமான ‘ஃபிளிப்கார்ட் குயிக்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 5ஜி ஆஃப் செய்யுங்கள்' - பேட்டரி ஆயுளை அதிகரிக்க வெரிசோன் அறிவுரை!