ETV Bharat / business

என்ன ஆனது பேஸ்புக்கின் டிக்டாக்? - மித்ரான்

டிக்டாக் போல சிறிய வீடியோக்களை உருவாக்க உதவும் தனது லாசோ செயலியின் செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

Facebook
Facebook
author img

By

Published : Jul 3, 2020, 7:32 PM IST

சீன செயலியான டிக்டாக்கிற்கு ரசிகர்கள் ஏராளம். பயனாளர்கள் சிறிய வீடியோக்களை எடுக்க உதவும் இந்த செயலி இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இதனால், டிக்டாக் செயலிக்கு மாற்றான மித்ரான், சிங்காரி உள்ளிட்ட செயலிகள் ஹிட் தற்போது அடித்துள்ளன.

இந்தியாவில் டிக்டாக் இருந்த இடத்தை பிடிக்க பல்வேறு நிறுவனங்களும் போட்டியிட்டுவரும் சூழ்நிலையில், டிக்டாக் போல சிறிய வீடியோக்களை எடுக்க உதவும் தனது லாசோ செயலியின் செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

லாசோ செயலி தற்போது கொலம்பியா, மெக்ஸிகோ, அமெரிக்கா, அர்ஜென்டினா, சிலி, பெரு, பனாமா, கோஸ்டாரிகா, எல் சால்வடோர், ஈக்வடார், உருகுவே உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தி மொழியும் லாசோ செயவியில் சேர்க்கப்பட்டது. இதனால், விரைவில் லாசோ இந்தியாவிலும் அறிமுகப்படுத்தபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லசோ செயலியின் செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக பேஸ்புக் தற்போது அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், டிக்டாக் செயலியில் உள்ளதைப் போல சிறிய வீடியோக்களை எடுக்கும் வசதிகளை இன்ஸ்டாகிராம் ரீல் என்ற பெயரில் பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக லாசோ செயலி நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், லாசோ செயலியில் தேவையான வீடியோக்களை ஜூலை 10ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பயனாளர்களிடம் பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோல தனிப்பட்ட பிராஜெக்ட்களை சேமித்து வைக்க உதவும் ஹோபி என்ற செயலியையும் நிறுத்தவுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இன்டெல் முதலீடு: அம்பானி காட்டில் மழை; ஜியோ தளத்தில் குவியும் முதலீடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.