இணையப் பணப்பரிவர்த்தனையில் கூகுள் பே, போன் பே போன்ற தளங்களுக்குப் போட்டியாக தற்போது ஃபேஸ்புக் நிறுவனமும் தனது புதிய ஃபேஸ்புக் பே செயலியை அமெரிக்காவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபேஸ்புக் பே மூலம் வாட்ஸ்அப், மெசஞ்சர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் உள்ள பயனர்கள், அதன் பயன்பாட்டிலிருந்து வெளியேறாமல், அவற்றின் வழியாகவே பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தனித்துவமாக பின்நம்பரோ அல்லது கை ரேகையோ பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பவோ அல்லது பணம் பெறவோ இந்த சேவை அனுமதிக்கும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக்கின் தனித்துவத்தைக் காட்டுவதற்காக புதிய லோகோ அறிமுகம்!
வாட்ஸ்அப், மெசஞ்சர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நான்கில், எந்தெந்த செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பதைப் பயனர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேஸ்புக் பே உள்ளே பயனர்கள் மட்டுமே தங்கள் கட்டணம், பரிவர்த்தனை ஆகியவற்றின் வரலாற்றைக் காண முடியும் என்றும், பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் நண்பர்களுடனோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்திலோ பகிரப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தனி உரிமையை காக்க ஆஸ்திரேலியா அரசு நடவடிக்கை