பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட், 2021ஆம் ஆண்டில் அனுபவமுள்ள ஒரு லட்சம் பேரை பணியமர்த்தவும், 1 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
எனவே, இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் நபர்கள், காக்னிசண்ட் நிறுவனத்தில் இந்தாண்டு பணியமர்த்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் முடிவானது, இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே ஊழியர்கள் பலர் வேலையிலிருந்து விலகியுள்ளதன் காரணமாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கணக்கிட்டுப் பார்த்ததில், மொத்தமாக வேலையிலிருந்து விலகியவர்களின் எண்ணிக்கை 31 விழுக்காடாக உள்ளது. அதில், 29 விழுக்காடு நபர்கள் அவர்களாகவே வேலையிலிருந்து விலகியுள்ளனர்.
இந்தாண்டின் முதல் காலாண்டில் மட்டும் தோராயமாக 23 ஆயிரம் ஊழியர்கள் பணியிலிருந்து விலகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மல்லையாவின் சொத்துகளை முடக்க அனுமதி... வசூல் வேட்டைக்கு வங்கிகள் தயார்