மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை இயக்குநரும், உலகின் மிகப்பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் தன் வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, விவசாயம் போன்றவற்றுக்கு அளித்து வருகிறார். அவ்வாறு அளித்தும் கூட கடந்த 24 வருடங்களாக பணக்கார பட்டியலில் அரசனாக வாழ்ந்து வருகிறார்.
குழந்தைகள் முதல் பணக்காரர்கள் வரை, உன்னுடைய ரோல் மாடல் யார் என்று கேட்டால் சற்றும் யோசிக்காமல், அவர்கள் கூறும் பெயர் பில் கேட்ஸ். பணக்காரர் இன்பத்திற்காக மட்டும் இவரை ரோல் மாடல் என்று அழைக்க மாட்டார்கள். அதையும் தண்டி மனிதாபிமானத்தின் மறுபெயர் என்றும் நற்பெயர் எடுத்திருக்கிறார், பில்கேட்ஸ்.
உலகப் பணக்கார பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை தனக்காகவே அலங்கரித்து வரும் பில்கேட்ஸ், கடந்த 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு அலுவலகம் செல்வதையே தவிர்த்துவிட்டார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா... ஆனால்,அது தான் உண்மை.
இல்லற வாழக்கையைப் பற்றி பில்கேட்ஸ் கூறுகையில், ' தம்பதியின் திருமண வாழ்க்கை வெற்றி பெறுவது என்பது அவர்களின் தனிப்பட்ட பொருளாதார வளத்தையோ, சமூக அந்தஸ்தையோ சார்ந்தது அல்ல. கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் புரிந்துணர்வே அவர்களின் வாழ்வை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றும்.
என் மனைவி பாத்திரம் தூய்மைப்படுத்தும்போது நானும் அவருக்கு அதில் உதவி செய்வேன். தினம்தோறும் இரவில் இருவரும் பாத்திரம் துலக்கும் நேரம் தான், நங்கள் அதிகமாக ஒன்றாக இருக்கும் நேரம். எங்களுக்குள் என்ன மனஸ்தாபம் இருந்தாலும் அந்த நேரத்தில், அதனைப் பேசி சரிசெய்து விடுவோம்’ என கூறுகிறார் பில்கேட்ஸ்.
மேலும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், குடும்ப உறவுகள் உடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றும், அவர்கள் புரியும் தினசரி வேளைகளில் தாமும் பங்கிடவேண்டும் என்கிறார் உலக பணக்காரரான பில்கேட்ஸ். சரிதானே..!
இதையும் படிங்க: வரும் மார்ச் மாதத்திற்குள் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்