ETV Bharat / business

ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டில் இணைந்த கதை - நிதி ஆயோக்

92 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்திய ரயில்வே பட்ஜெட், நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரையின்படி 2016ஆம் ஆண்டு பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

mer
author img

By

Published : Jun 30, 2019, 9:44 PM IST

Updated : Jul 2, 2019, 12:20 PM IST

ஜம்மு தொடங்கி கன்னியாகுமரி வரை, வதோதரா தொடங்கி வடகிழக்கு இடாநகர் வரை நாட்டின் நான்கு திசைகளையும் தனது தண்டவாளக் கோடுகளால் இணைக்கும் மாபெரும் அமைப்பு இந்திய ரயில்வே துறை. மாபெரும் இந்திய நிலப்பரப்பை ஒருங்கிணைக்கும் சக்தியாகத் திகழும் இந்திய ரயில்வேதான் உலகின் எட்டாவது அதிக வேலையாட்களைக் கொண்ட அமைப்பு என்றால் அதில் ஆச்சரியப்படும் அம்சம் எதுவும் இல்லை. இத்தகைய பெரும் கட்டமைப்பைக் கொண்டதாலேயே ரயில்வேத் துறைக்குப் பிரத்யேகமான தனி பட்ஜெட் கடந்த 2017ஆம் ஆண்டு வரைத் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தனி அம்சம் இது. உலகில் வேறு எந்த நாடும் ரயில்வேக்கென்று இப்படித் தனி பட்ஜெட் போட்டதாகவும் வரலாறு இல்லை.

ரயில்வே பட்ஜெடின் வரலாறு:

ரயில்வே பட்ஜெட் உருவான கதை சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துடன் தொடர்புடையது. 1921ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டுடன்தான் ரயில்வே பட்ஜெட்டும் இணைந்திருந்தது. அதன் பின்னர், பிரிட்டானிய பொருளாதார அறிஞரான அக்வொர்த் தலைமையிலான குழு பரந்து பட்டு கிடக்கும் இந்தியாவில் ரயில்வேயின் முக்கியத்துவத்தைக் கண்டறிந்தது. அப்போதைய இந்தியாவின் 70 சதவிகித பொருளாதார பங்களிப்பு ரயில்வேயுடன் இணைந்திருப்பதாக அந்த குழு தெரிவித்தது.

bibek
பிபிக் திப்ராய்

அக்குழுவின் பரிந்துரையின்படி, 1924ஆம் ஆண்டு தொடங்கி 92 ஆண்டுகள் இந்தியாவில் ரயில்வே துறைக்கென பிரத்யேக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் ரயில் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஜான் மாத்தாய், அதன் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரி லால் நந்தா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜீ, லாலு பிரசாத் யாதவ் என இந்திய அரசியல் வரலாற்றின் முக்கிய தலைவர்கள் இதுவரை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.

நிதி ஆயோகின் பரிந்துரை:

இப்படி இருக்க, பிற்காலத்தில் இந்திய பொது பட்ஜெட்டில் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை போன்றவற்றின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் பிபிக் திப்ராய் தலைமையிலான குழு ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கப் பரிந்துரை செய்தது. விளைவு 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவில் பாரம்பரியம் மிக்க இந்திய ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் கடைசி ரயில்வே பட்ஜெட்டை சுரேஷ் பிரபு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி தாக்கல் செய்தார்.

others
முக்கியத்துவம் பெற்ற பிறதுறைகள்

ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்ததால் ஏற்பட்ட பலன்கள்:

  • அரசாங்கத்திடமிருந்து ரயில்வேத் துறைக்கு தேவையான நிதியைப் பெற முடியும்.
  • ஆண்டு தோறும் ரயில்வேத் துறையின் லாபத் தொகையான சுமார் ரூ. 9,700 கோடியை மத்திய அரசுக்கு ரயில்வே தரவேண்டிய தேவையில்லை.
  • முதலீட்டுத் தொகையான சுமார் ரூ. 2 லட்சம் கோடி சேமிக்கப்படுகிறது.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 2, 2019, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.