கரோனா பாதிப்பு காரணமாக அனைத்துத் தொழில் நிறுவனங்களும் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், சில நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன.
கடந்த வாரம் ஸ்மோடோ, ஸ்விக்கி சில ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் 34 இடங்களில் நிறுவனங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் அமெரிக்க நிறுவனமான வீ வொர்க் இந்தியாவில் பணிபுரியும் 20 விழுக்காடு ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் கரோனா வைரஸ் பாதிப்பால், தொழிலில் ஏற்பட்ட சரிவு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு இது மாபெரும் கஷ்ட காலம் எனவும் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கரண் விர்வானி தெரிவித்துள்ளார்.
மொத்தம் இந்த நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் 500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாஃப்ட்பேங்க் குழுமத்திலிருந்து விடைபெற்றார் ஜாக் மா!