இந்தியப் பொருளாதாரம் சரிவால் 2019 ஆம் முதல் பங்குச்சந்தையின் வர்த்தகம் சிறப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒருபுறம் சரிவைச் சந்தித்தாலும், சென்செக்ஸ், நிஃப்டி பங்குகள் இழுத்து பிடித்து பங்குச்சந்தையைக் காப்பாற்றி வந்தது.
இதனிடையே கரோனா வைரஸ் தாக்குதல், யெஸ் வங்கி நெருக்கடி என இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்திக்க தொடங்கியது. என்னடா இது போறாத காலம் பங்குச்சந்தைக்கு என அனைவரையும் சிந்திக்க வைத்த சென்செக்ஸ், நிஃப்டி, வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த 12ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பங்குச்சந்தை புள்ளிகள் அனைத்தும் சரிந்தன. எவ்வளவு போராடினாலும் சென்செக்ஸ், நிஃப்டியால் எழுச்சிப் பெறமுடியவில்லை.
சென்செக்ஸில் உள்ள அனைத்து பங்குகளும் சரிவைக் காண இன்டஸ்இண்ட் வங்கி நிறுவன பங்கும் சரிவைச் சந்தித்தது. நாளுக்கு நாள் புள்ளிகள் குறைந்து கொண்டே செல்ல யெஸ் வங்கி நிலைமை இன்டஸ்இண்ட் வங்கிக்கும் வந்துவிடுமோ என வர்த்தகதாரர்கள் கவலை படத்தொடங்கியுள்ளனர்.
மேலும் இன்டஸ்இண்ட் வங்கியில் நிதிப்பற்றாக்குறை எழுந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், இன்டஸ்இண்ட் வங்கி பங்குச்சந்தையில் சரிவைக் கண்டாலும், சிறப்பாக தான் செயல்படுகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் யாரும் கவலைப்படத்தேவை இல்லை. நிதி ரீதியாக நாங்கள் வலுவாக உள்ளோம். எனவே எங்கள் வங்கியில் நிதிப்பற்றாக்குறை இல்லை என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இன்டஸ்இண்ட் வங்கி.
இதையும் படிங்க: 'நிலுவைத் தொகை செலுத்த கூடுதல் அவகாசம் இனி கிடையாது': அச்சத்தில் ஏர்டெல், வோடாபோன்