ETV Bharat / business

யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் வாதவாண் சகோதர்களுக்கு ஜாமீன்

யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாதவாண் சகோதரர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (ஆக.20) பிணை வழங்கியது.

Yes Bank fraud case  Yes Bank  Wadhawan brothers  bail to Wadhawan brothers  HC grants bail to Wadhawan brothers  Dewan Housing Finance Corporation Ltd  Kapil Wadhawan  Dheeraj Wadhawan  Justice Bharati Dangre  Bombay High Court  Brothers  Case  யெஸ் வங்கி முறைகேடு  வாதவாண் சகோதரர்கள்  மும்பை உயர் நீதிமன்றம்  பிணை

author img

By

Published : Aug 20, 2020, 10:05 PM IST

மும்பை: யெஸ் வங்கியில் பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் கபில் வாதவாண் மற்றும் தீரஜ் வாதவாண் ஆகியோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று பிணை (ஜாமின்) வழங்கியது.

இந்த வழக்கில் 60 நாள்களுக்குள் அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தவறியதால் நீதிபதி பாரதி டாங்க்ரே இவர்களுக்கு பிணை வழங்கியுள்ளார்.

முன்னதாக, இருவரும் தலா ரூ.1 லட்சம் வைப்பு செலுத்துமாறும், அவர்களின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி பிந்து கபூர், மகள்கள் ரோஷ்னி, ரேகா மற்றும் அவர்களது கணக்காளர் துலரேஷ் கே ஜெயின் மற்றும் இணை உதவியாளர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

வாதவாண் சகோதரர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை தொடர்ந்துள்ள மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகையால் பிணை கிடைத்துள்ள போதிலும் அவர்களால் வெளியே வர முடியாது. தொடர்ந்து சிறைக்குள் இருக்கும் நிலையே உள்ளது.

இதையும் படிங்க: யெஸ் வங்கி முறைகேடு: டிராவல் ஏஜென்ஸியில் அதிரடி ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.