டெல்லி: கடந்தாண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை, காலாவதியாகும் வாகனப்பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி.), லைசென்ஸ், தகுதி சான்று, அனுமதி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், இந்த உத்தரவை அனைவரும் தீவிரமாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
இச்சூழலில், வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஆக்டோபர் 31ஆம் தேதி வரை மேலும் நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.
15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகனப்பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்து இருந்தால் 62 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தைகளின் மனத்திடத்தை காக்க உதவும் காய்கறி, பழ வகைகள்!