ETV Bharat / business

'அமெரிக்காவிலிருந்து கோழி கால்கள் இறக்குமதி செய்வது இந்தியவுக்கு பெரும் பாதிப்பு' - இந்திய கறி சந்தை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையில் கோழிக் கால்கள் இறக்குமதி செய்வது குறித்து புதிய ஒப்பந்தங்கள் கையொழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏறப்படும் ஆபத்துகள் குறித்து விளக்குகிறார் சுரேஷ் சித்தூரி.

US chicken legs import
US chicken legs import
author img

By

Published : Feb 16, 2020, 9:57 PM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ளார். ட்ரம்பின் இந்த வருகையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோழிக் கால்கள் இறக்குமதி செய்வது குறித்து புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் இந்திய இறைச்சி சந்தையில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து துறை சார்ந்த நிபுணர் சுரேஷ் சித்தூரியிடம் நமது ஈடிவி பாராத் செய்தியாளர் நடத்திய கலந்துரையாடல்...

கேள்வி: அமெரிக்கர்கள் ஏன் கோழிக் கால்களை உண்பதில்லை?

பதில்: அமெரிக்காவில் ஒரு பிராண்டிங் உத்தி இருக்கிறது. அதாவது, வெள்ளை கறியாக கருதப்படும் கோழியின் மார்பகப் பகுதி கறிகள் மனிதர்களின் உடல் நலத்துக்கு மிக நல்லது என்ற ஒரு கருத்தை தீவிரமாக அமெரிக்கர்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். அமெரிக்கர்கள் பார்வையில் கோழியின் தொடைப் பகுதிகள் கறுப்பு கறியாக கருதப்படுகிறது. ஆனால், அடிப்படையில் வெள்ளை கறிக்கும் கறுப்பு கறிக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் குறைவானது.

கறுப்பு கறியைவிட வெள்ளை கறியில் கூடுதலாக 50 முதல் 60 விழுக்காடு வரை பலன் கிடைப்பதாக அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். கறுப்பு இறைச்சியை உண்பதிலிருந்து அமெரிக்கர்கள் விடுபட்டால், வெள்ளை இறைச்சிக்கு அதிக தேவை ஏற்படும். அமெரிக்காவில் உள்ளூர் இறைச்சி விற்பனையாளர்களுக்கு இது அதிக லாபத்தை கொடுக்கும் விஷயம். இதனால், அவர்கள் கறுப்பு இறைச்சியை சந்தையிலிருந்து விலக்க விரும்புகிறார்கள்.

இதன் மூலம் கோழி இறைச்சி சந்தையில் சிக்கலை உருவாக்குகிறார்கள். அமெரிக்காவில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுகையில், அவர்கள் இந்தியாவுக்கு கறுப்பு இறைச்சியாக கருதப்படும் கோழிக் கால்களை விற்கிறார்கள். இதன் வழியாக, அமெரிக்காவில் கோழி இறைச்சிக்கும் தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனர். இது ஒரு வணிக விளையாட்டு

கேள்வி: கோழி இறைச்சி தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், நம் நாட்டில் கோழி இறைச்சி தொழில் பாதிப்படையுமா?

பதில்: கோழி இறைச்சி தொழில் கிட்டத்தட்ட முடிவுக்கே வந்துவிடும். இந்த விஷயத்தில் இரு வழிகளை நாம் பார்க்க வேண்டும். கோழிகளின் உணவில் 70 முதல் 80 சதவிகிதம் சோளம் மற்றும் சோயா அடங்கியிருக்கின்றன. இந்தியாவில் சோளத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.18,000. இதுவே அமெரிக்காவில் ரூ.10,000க்கு சோளம் வாங்க முடியும். இரு நாடுகளுக்கிடையே 70 விழுக்காடு விலை வித்தியாசம் உள்ளது.

இந்தியாவில் சோயாவின் விலை ரூ . 40,000 ஆகும்; அமெரிக்காவில் ரூ. 26,000க்கு வாங்க முடியும். இதுதான் இந்திய சந்தையிலுள்ள பிரச்னை. அமெரிக்காவில் இருந்து சோயாவையும் சோளத்தையும் இறக்குமதி செய்ய அனுமதித்தால், அவர்களால் நம்மிடத்தில் போட்டி போட முடியாது. ஏனென்றால் நாம் உற்பத்தியில் அத்தனை திறனுடன் உள்ளோம்.

கோழி வளர்ப்பிலுள்ள செலவில் 70 முதல் 75 விழுக்காடு வரையிலான செலவு, அதன் தீவனத்துக்கே போய் விடுகிறது. அமெரிக்கர்களுக்கு கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதித்தால், சோயா மற்றும் சோளம் போன்றவற்றை எளிதாக இங்கே இறக்குமதி செய்ய முடியுமல்லவா? 1 லட்சம் கோழி முட்டைகளை உற்பத்தி செய்ய 15 ஏக்கர் நிலம் தேவைப்படும். இந்தியாவில் 25 கோடி முட்டைகள் விற்கப்படுகின்றன. அப்படியென்றால், எத்தனை ஏக்கர் நிலம் தேவைப்படும். கணக்கிட்டுப்பார்த்தால் எல்லாமே மோசடியாகவே தெரிகிறது.

ஏதோ நான்கு - ஐந்து கோடி பேர் வேலை இழக்கும் விஷயத்தோடு இது முடிந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவிலிருந்து கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை எதிர்க்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக நமது கைகள் முன்னரே கட்டப்பட்டுவிட்டது. உற்பத்தி இல்லையென்றால் தடையற்ற வர்த்தகம் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது எந்த முன்னெச்சரிக்கை வர்த்தக பாதுகாப்பும் இல்லாமல் அமெரிக்காவிடத்தில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது விவேகமான முடிவு அல்ல. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, பிறகு எப்போதும் இந்தியா மீள முடியாமல் போய்விடும்.

கேள்வி: இந்த முடிவால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

பதில்: இது போன்ற இறைச்சியை இந்திய வாடிக்கையாளர்கள் வாங்கமாட்டார்கள். ரெஸ்டாரன்ட், ஹோட்டல்கள் போன்றவை விலை மலிவு என்பதால் வாங்கி பயன்படுத்தக் கூடும். ஆனால், இதுவும் முக்கியமான நுகர்வு அம்சம்தான்.

இதையும் படிங்க: 'நமஸ்தே ட்ரம்ப்'- ட்ரம்பை வரவேற்கத் தயாராகும் இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.