இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணாமாக தொழில்துறை முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், பொருளாதார வீழ்ச்சியை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு தொழில் துறையினர் மத்தியில் உருவாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவிவருவதால், வளர்ச்சி தேக்கம் கண்டுள்ளது. தேக்கம் தற்போது வீழ்ச்சியாக மாறும் என பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஜின்டால் குழுமத் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான சஜ்ஜன் ஜின்டால், ”நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள கரோனா லாக்டவுன் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது. அதேவேளையில் நாடு முழுவதும் உள்ள பொருளாதரா நடவடிக்கையை முற்றிலுமாக வீழ்த்தியுள்ளது.
பொருளாதார வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கே பேராபத்தை விளைவிக்கும். எனவே பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அரசு களமிறங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா கடன் உதவியாக ரூ.11,387 கோடி; ஆசிய வளர்ச்சி வங்
கி