டெல்லி : 2022-23 ஆம் ஆண்டிற்கான நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கை பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
நாட்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் கூட்டத்தொடர் ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்குகிறது.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட அமர்வு பிப்.11ஆம் தேதி நிறைவடைகிறது. அடுத்த அமர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி, ஏப்.8ஆம் தேதியுடன் முடிவடையும்.
இதற்கிடையில் கரோனா பரவல் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் சில பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மக்களவை மாலை 4 மணிக்கு தொடங்கி 9 மணி வரையும், மாநிலங்களவை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரையும் நடைபெறும்.
இருப்பினும் வரவு செலவு திட்ட அறிக்கை கூட்டத்தொடரின் தொடக்க நாளான ஜன.31 மற்றும் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் பிப்.1 ஆகிய தினங்களில் இரு அவைகளும் பிப்.11ஆம் தேதி தொடங்கும். வரவு செலவு திட்ட அமர்வுக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை ஜன.31ஆம் தேதி தாக்கலாகிறது.
இதையும் படிங்க : வேளாண் பட்ஜெட்: விவசாயிகளின் வரவேற்பும் விமர்சனமும்