டெல்லி: மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் டெல்லியில் புதன்கிழமை (ஜூன் 9) அறிவித்தார்.
அப்போது, “துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சந்தைப்படுத்துதல் முறையை 62, 65 விழுக்காடு அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் வேளாண் பொருள்களின் ஆதரவு விலையை கவனத்தில் கொண்டும் தொடர்ந்து வேளாண் பொருள்கள் விலை ஆதரவு விலை உயர்த்தப்பட்டுவருகிறது.
அதேபோல் தற்போதுள்ள ஆதரவு விலைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்பதை உறுதியளிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை விவசாயிகளுக்கு போதிய அவகாசம் மற்றும் வாய்ப்புகள் வழங்கும்.
அதேபோல் நெல்லுக்கான ஆதரவு விலை ரூ.72 அதிகரிக்கப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.1940 நிர்ணயிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: பாஜக மட்டுமே தேசியக் கட்சி, மற்றதெல்லாம் பிராந்திய கட்சி- ஜிதின் பிரசாதா!