ETV Bharat / business

விற்பனையில் 17.5% உயர்வைக் கண்ட டிவிஎஸ்!

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மொத்தமாக தனது விற்பனையில் 17.5 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது. அதேபோல இருசக்கர வாகன விற்பனையில் 20 விழுக்காடு வளர்ச்சியும், உள்நாட்டு விற்பனையில் 13 விழுக்காடு அளவு வளர்ச்சியையும் சந்தித்துள்ளது.

author img

By

Published : Jan 3, 2021, 12:08 PM IST

TVS Motor Company sales in December 2020

கிருஷ்ணகிரி: டிவிஎஸ் நிறுவனம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2,72,084 வாகனங்களை விற்று, 17.5 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இதே காலத்தில் கடந்த ஆண்டில் 2,31,571 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. மொத்தமாக இருசக்கர வாகனங்களை பொறுத்தவரையில் 20 விழுக்காடு விற்பனை அதிகரித்து 2,58,239 ஆக இருந்தது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலத்தின் விற்பனை 2,15,619 ஆக இருந்தது.

டிசம்பர் 2020இல், 20% விற்பனையை அதிகரித்து சாதனை படைத்த மாருதி சுசூகி!

உள்நாட்டு சந்தை விற்பனை 13 விழுக்காடு வளர்ச்சிக் கண்டு 1,76,912 ஆக இருந்தது. இதுவே டிசம்பர் 2019இல் 1,57,244ஆக இருந்தது. ஸ்கூட்டர் ரக வாகனங்களின் விற்பனை 74,716இல் இருந்து 77,705ஆக அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியில், 28 விழுக்காடு அதிகரித்து 94,269 வாகனங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 73,512ஆக இருந்தது. மூன்று சக்கர வாகன வரிசையில் 13,845 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது. இதே 2019 டிசம்பரில், 15,952ஆக இருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.