டிக் டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை பைட் டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடியால், அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்நாட்டு உரிமையை வழங்க முன்னதாக டிக்டாக் முடிவு செய்திருந்தது.
இச்சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக் டாக் உரிமையை வாங்கப் போகிறது என்ற பரவலான கருத்துக்கள் எழுந்தன. இந்த நேரத்தில் டிக் டாக்கை கையகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மற்றொரு பிரபல நிறுவனமான வால் மார்ட் கைகோர்த்தது.
தொடர்ந்து, பல கட்ட பேச்சுவார்தைகளின் முடிவிலும் பைட் டான்ஸ் தங்களின் நிலைபாட்டை தக்கவைத்துக்கொள்ள போராடியது. இந்நிலையில், தங்களின் டிக் டாக் அமெரிக்க உரிமையை ஆரக்கிள் நிறுவனத்திடம் கொடுக்க அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.