டெல்லி: தொலை தொடர்பு நிறுவனங்களின் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடே முடங்கிய நிலையில் தொலைதொடர்பு நிறுவனங்களின் லாபம் 5 சதவீதம் உயர்வு கண்டுள்ளது தெரியவந்துள்ளது.
முன்னதாக, ஜூன் வரையிலான காலாண்டில் லாபம் ஒரு விழுக்காடு ஆக காணப்பட்டது. இந்தச் சந்தையில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்துகின்றன.
கரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது காலாண்டில் பார்தி ஏர்டெல்லின் லாபம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஜியோவின் வருமானம் 6 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது.
ஒரு சதவீத வளர்ச்சியுடன் மூன்றாம் இடத்தில் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வருகின்றன. புதிய இணையதள உபயோகிப்பாளர்கள் வரிசையிலும் பார்தி ஏர்டெல் 13.9 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
அடுத்த இடத்தில் 7.3 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ஜியோ இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேநேரம், வோடபோன் ஐடியா 8 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
இதையும் படிங்க: 40.56 கோடி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்திய ஜியோ; லாபம் மும்மடங்கு உயர்வு!