ETV Bharat / business

வாட்ஸ்அப் மூலம் இனி செக் இன் செய்யலாம் - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: ஆன்லைன் மூலம் செக் இன் செய்யும் புதிய வசதியை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

SpiceJet offers automated customer service

author img

By

Published : Aug 14, 2020, 1:38 AM IST

கோவிட்-19 பரவல் காரணமாக அரசு விமானப் பயணிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அனைத்து பயணிகளும் விமானம் கிளம்புவதற்கு 48 முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக ஆன்லைன் மூலம் செக் செய்ய வேண்டும் என தற்போது நடைமுறை உள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது இணையதளம், மொபைல் அப்ளிகேஷன் ஆகியவற்றில் செக் இன் வசதி வைத்திருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் மூலம் செக் இன் செய்யும் வசதியை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. விமான பயணிகள் அனைவரும் Ms Pepper எனும் பெயரில் செயல்படும் 6000000006 என்ற எண்ணுக்கு Hi என குறுஞ்செய்தி அனுப்பினால் போதும்.

மேலும், இந்த வாட்ஸ்அப் சேவை மூலம் பயணிகள் சந்தேகங்களையும் கேட்டறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான சிக்னல் எடுக்கும் இடங்களிலும், வாட்ஸ்அப் செயல்படும் என்பதால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பிஎஸ்-4 வகை வாகனங்கள் விவகாரம்: மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் விற்பனையான வாகனங்களை பதிவு செய்யலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.