ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளீட்டு விலை உயர்வு காரணமாக அனைத்து ரக வாகனங்களின் விலையும் ஜனவரி முதல் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது.
அனைத்து ரக வாகனங்களின் விலையும் 2.5 விழுக்காடு உயர்த்த வாய்ப்புள்ளதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏற்கனவே மாருதி சுசுகி, ரெனால்ட், ஹோன்டா, மஹிந்திரா, போர்டு, ஹீரோ, நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜனவரி மாதம் முதல் விலை உயர்வை அறிவித்தன என்பது நினைவுகூரத்தக்கது.
ஃபோர்டு நிறுவனம், 1 முதல் 3 விழுக்காடு விலை உயர்வை தெரிவித்திருந்த நிலையில், மாருதி விலை உயர்வின் அளவு குறித்து எதுவும் கூறவில்லை.
இதையும் படிங்க: அமேசான் மூன்றாம் நபர் விற்பனை 50% உயர்வு